/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
கூடுதல் வரி விதிப்பை நிறுத்த மனு
/
கூடுதல் வரி விதிப்பை நிறுத்த மனு
ADDED : நவ 30, 2024 05:42 AM
ஒட்டன்சத்திரம்; கூடுதல் வரிவிதிப்பை நிறுத்தி வைக்க வலியுறுத்தி ஒட்டன்சத்திரம் நகர ஒருங்கிணைந்த வர்த்தகர் சங்கத்தினர் நகராட்சி கமிஷனர் ஸ்வேதாவிடம் மனு அளித்தனர்.
மனுவில் கூறியிருப்பதாவது:
பழைய கட்டடங்களை அளந்து விதிக்கப்படும் புதுவரிவிதிப்பை தவிர்த்து பழைய வரிமுறையை தொடர வேண்டும். சொத்து வரியை வருடம் தோறும் 6 சதவீதம் கூட்டும் முடிவை மாற்றி பழைய வரிமுறையை தொடர வேண்டும். சொத்து வரிக்கு விதிக்கப்படும் அபராத தொகையை நிறுத்தி வைக்க வேண்டும். உணவு பொருள் சார்ந்த துறையை தவிர மற்ற துறை வியாபாரிகளுக்கு விதிக்கப்படும் உரிமை கட்டணத்தை நிறுத்தி வைத்து தொழில் வரியை மட்டும் விதிக்க வேண்டும். காலி இடத்திற்கு விதிக்கப்படும் வரியை நிறுத்தி வைக்க வேண்டும். வணிக நிறுவனங்களில் வேலை செய்பவரின் எண்ணிக்கை கணக்கிட்டு அதன் அடிப்படையில் வரி விதிப்பதை நிறுத்தி வைக்க வேண்டும் என குறிப்பிட்டிருந்தனர்.

