/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
கட்சிகள் தனித்து போட்டியிட தேசிய கொடியுடன் மனு
/
கட்சிகள் தனித்து போட்டியிட தேசிய கொடியுடன் மனு
ADDED : ஜன 30, 2024 07:00 AM
திண்டுக்கல் : ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி கொடுக்கவும், லோக்சபா தேர்தலில் எந்த அரசியல் கட்சியும் யாருடனும் கூட்டணி வைக்காது தனித்து போட்டியிட வேண்டும் என்பதை வலியுறுத்தி தேசிய கொடியுடன் மனு அளித்த முதியவர் உட்பட பல்வேறு பிரச்னைகள்தொடர்பாக குறைதீர் கூட்டத்தில் 194 பேர் முறையிட்டனர்.
கலெக்டர் பூங்கொடி தலைமையில் நடந்த குறைதீர் கூட்டத்தில் 194 மனுக்கள் பெறப்பட்டதில் மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்க கலெக்டர் அதிகாரிகளை அறிவுறுத்தினார்.
முதல்வரின் பொது நிவாரண நிதியில் இருந்து 8 பயனாளிகளுக்கு ரூ.8 லட்சம் நிதி உதவி, மாற்றுத்திறனாளிகள் 4பேருக்கு பேட்டரியால் இயங்கும் சக்கர நாற்காலிகள் என 87 பயனாளிகளுக்கு ரூ.9 லட்சத்து 74 ஆயிரம்மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கினார். தேசிய வாக்காளர் தினத்தையொட்டி பள்ளி, கல்லுாரி மாணவர்களுக்கு நடத்தப்பட்ட போட்டிகளில் வெற்றி பெற்ற 61 பேருக்கு ரூ.1 லட்சத்து 65 ஆயிரம் பரிசு தொகைக்கானகாசோலைகளை கலெக்டர் பூங்கொடி வழங்கினார். மாவட்ட வழங்கல் அலுவலர் சிவக்குமார், கலெக்டரிடன் நேர்முக உதவியாளர் கோட்டைக்குமார் கலந்துகொண்டனர்
ஜல்லிக்கட்டுக்கு அனுமதி கோரி மனு
நிலக்கோட்டை, மைக்கேல்பாளையத்தைச் சேர்ந்த ஊர் நிர்வாகக் குழுவினர் ஜல்லிக்கட்டு பொறுப்பாளர்கள் கலெக்டரிடம்அளித்த மனு வில் மைக்கேல்பாளையம் புனித வனத்து அந்தோணியார் சர்ச் விழாவையொட்டி ஜல்லிக்கட்டுப் நடத்த அனுமதி அளிக்க வேண்டும் எனதெரிவிக்கப்பட்டிருந்தது.
தேசிய கொடியுடன் மனு
திண்டுக்கல் பூச்சிநாயக்கன்பட்டியை சேர்ந்த அ.தி.மு.க. தொண்டரான சண்முகம் 60, கையில் தேசிய கொடியை ஏந்தியபடி கலெக்டர் அலுவலகத்துக்கு வந்து மனுஅளித்தார்.
லோக்சபா தேர்தலில் எந்த அரசியல் கட்சியும் யாருடனும் கூட்டணி வைக்க கூடாது.கூட்டணி இல்லாமல் தனித்து நின்று போட்டியிட வேண்டும்.
தேர்தலுக்கு பிறகு வேண்டுமானால் கூட்டணிவைத்துக்கொள்ளலாம். ஓட்டுக்கு பணம் கொடுக்கவோ, வாங்கவோ கூடாது. அதை தடுக்க தேர்தல் அதிகாரிகள்நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிடப்படிருந்தார்.