ADDED : அக் 02, 2025 03:26 AM

ஒட்டன்சத்திரம் காளாஞ்சிபட்டி ஸ்ரீ ரங்கா அன் சன்ஸ் வென்சர்ஸ் நயரா எனர்ஜி பெட்ரோல் பங்க் திறப்பு விழா நடந்தது. உணவுத்துறை அமைச்சர் அர.சக்கரபாணி குத்துவிளக்கேற்றி திறந்து வைத்தார்.
உரிமையாளர்கள் வெங்கடேஷ், விஜயகுமார் வரவேற்றனர். தி.மு.க., ஒன்றிய செயலாளர்கள் ஜோதீஸ்வரன், பாலு, நகர அவைத் தலைவர் சோமசுந்தரம், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் பாண்டியராஜன், ம.தி.மு.க.., மாவட்டச் செயலாளர் செல்வராகவன் பொதுக்குழு உறுப்பினர் தமிழ் வேந்தன், முன்னாள் மாவட்ட கவுன்சிலர் சங்கீதா பழனிச்சாமி, வீரபாண்டிய கட்டபொம்மன் பண்பாட்டுக் கழக மாநில பொதுச் செயலாளர் ராமகிருஷ்ணன், முன்னாள் ஊராட்சித் தலைவர்கள் தங்கபாண்டியன், செந்தில்குமார், ரத்தினவேல், முன்னாள் துணைத் தலைவர் கவுரி சரவணன், ஆண்டிவேல், ம.தி.மு.க., நிர்வாகி மல்லசீலன் கலந்து கொண்டனர்.