/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
ஒட்டன்சத்திரத்தில் பீன்ஸ் விலை அதிகரிப்பு
/
ஒட்டன்சத்திரத்தில் பீன்ஸ் விலை அதிகரிப்பு
ADDED : அக் 02, 2025 04:00 AM
ஒட்டன்சத்திரம் : வரத்து குறைவால் ஒட்டன்சத்திரம் மார்க்கெட்டில் கிலோ ரூ.10 க்கு விற்ற பீன்ஸ் ரூ.20 க்கு விற்பனை ஆனது.
ஒட்டன்சத்திரம் மற்றும் மலைப்பகுதி கிராமங்களான வடகாடு, கண்ணனூர், கோம்பைபட்டி, பெத்தேல்புரம் சுற்றியுள்ள கிராம பகுதிகளில் பீன்ஸ் அதிகமாக விளைவிக்கப்படுகிறது. கடந்த சில நாட்களாக வரத்து அதிகமாக இருந்ததால் கிலோ ரூ.10 க்கு விற்பனையானது. இந்நிலையில் தற்போது பல இடங்களில் அறுவடை குறைந்ததால் மார்க்கெட்டிற்கு வரத்து குறைந்துள்ளது. இதன் காரணமாக கிலோ ரூ.10 க்கு விற்ற பீன்ஸ் விலை இரட்டிப்பாகி ரூ.20 க்கு விற்பனையானது.
வியாபாரி ஒருவர் கூறுகையில், 'வரும் நாட்களில் வரத்து குறைய வாய்ப்பு உள்ளதால் பீன்ஸ் விலை இன்னும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது' என்றார்.