/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
மருத்துவக் கல்லுாரி முன் மறியல்
/
மருத்துவக் கல்லுாரி முன் மறியல்
ADDED : பிப் 02, 2026 05:34 AM
திண்டுக்கல்: ஒட்டன்சத்திரம் தாலுகா கே.அத்திக்கோம்பை பெருமாள் 25. தனியார் ஹாலோ பிளாக் கம்பெனியின் கூலித்தொழிலாளி. ஜவ்வாதுபட்டி அருகே நங்காஞ்சி ஆற்றுப்பாலத்திற்கு கீழே தண்ணீரில் பெருமாளின் உடல் இறந்த நிலையில் மிதந்தது. இடைய கோட்டை போலீசார் உடலை மீட்டு விசாரித்தனர். அதில், 'அவரின் ஆண் உறுப்பு அறுக்கப்பட்டு தலையில் கற்களால் தாக்கி கொலை செய்யப்பட்டு இருப்பது தெரிந்தது.
போலீசார் அவரது உடலை திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். குற்றவாளிகளை கைது செய்யவும், பெருமாளின் உடலை வாங்க மறுத்தும் அவரின் உறவினர்கள் மருத்துவக்கல்லுாரி நுழைவாயில் முன் மறியலில் ஈடுபட்டனர். நகர் வடக்கு போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி, சமாதானப்படுத்தினர். அதன் பின் மறியலை கைவிட்டுச் சென்றனர்.

