/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
பழநியில் நுழைவு கட்டண உயர்வு பக்தர்கள் கவலை
/
பழநியில் நுழைவு கட்டண உயர்வு பக்தர்கள் கவலை
ADDED : அக் 28, 2024 01:31 AM

பழநி: திண்டுக்கல் மாவட்டம் பழநி நகராட்சி டோல்கேட் கட்டணம் உயர்த்தப்பட்டதால் முருகன் கோயிலுக்கு வரும் பக்தர்கள் கவலை அடைந்துள்ளனர்.
பழநி நகராட்சி சார்பில் சுற்றுலா வாகன நுழைவு கட்டணம் டோல்கேட் ஆண்டவன் பூங்கா ரோடு, இடும்பன் கோயில் இட்டேரி ரோடு, குளத்து ரோடு- அருள்ஜோதி வீதி -அய்யம்புள்ளி ரோடு சந்திப்பு, பாலசமுத்திரம் ரோடு ஆகிய 4 இடங்களில் வசூலிக்கப்படுகிறது. சுற்றுலா வாகனங்களுக்கான நுழைவு கட்டணம் 2021 முதல் பஸ்சிற்கு ரூ.130, லாரிக்கு ரூ.100, வேனுக்கு ரூ.90, காருக்கு ரூ.60 என வசூலிக்கப்பட்டது.
சில நாட்களாக நகராட்சி வாகன நுழைவு கட்டணம் உயர்த்தப்பட்டு பஸ்சிற்கு ரூ.150, லாரிக்கு ரூ.130, வேனுக்கு ரூ.100, காருக்கு ரூ.70 என நிர்ணயிக்கப்பட்டு அறிவிப்பு பலகை வைத்து வசூலிக்கப்படுகிறது.

