/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
பழநியில் குவியும் பாதயாத்திரை பக்தர்கள்
/
பழநியில் குவியும் பாதயாத்திரை பக்தர்கள்
ADDED : ஜன 25, 2024 05:43 AM

பழநி: பழநி முருகன் கோயில் தைப்பூச திருவிழாவை யொட்டி பாதயாத்திரை பக்தர்கள் குவிந்த வண்ணம் உள்ளனர்.
பழநி முருகன் கோயில் தைப்பூச திருவிழா கிழக்கு ரத வீதி பெரியநாயகி அம்மன் கோயிலில் ஜன.19ல் கொடியேற்றத்துடன் துவங்கி நடந்து வருகிறது . இதை யொட்டி
பாதயாத்திரையாக வெளி மாவட்ட பக்தர்கள் அதிகளவில் வந்த வண்ணம் உள்ளனர்.
கூட்டம் கூட்டமாக வரும் பக்தர்களுக்கு வழிநெடுகிலும் பல்வேறு அமைப்புகளால் அன்னதானம், பழங்கள் , இளநீர் வழங்கப்பட்டு வருகிறது. பல இடங்களில் சுகாதாரத்துறை சார்பில் மருத்துவ மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன.
கோயில் நிர்வாகம் சார்பில் தற்காலிக கழிப்பறைகள், குளியல் அறைகள், பக்தர்கள் தங்க நிரந்தர, தற்காலிக இடங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. பழநி இடும்பன் குளம், சண்முக நதி பகுதிகளில் பக்தர்கள் கூட்டம் அதிக அளவில் உள்ளது.
பழநியில் நேற்று காலை முதல் போக்குவரத்து நெரிசல் அதிக அளவில் இருந்தது.
இதனால் பக்தர்கள் சிரமம் அடைந்தனர். பக்தர்களின் பாதுகாப்பு கருதி 2000க்கு மேற்பட்ட போலீசார் கண்காணிப்பில் ஈடுபட்ட வருகின்றனர்.