/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
ஒட்டன்சத்திரத்தில் குவிந்த பாதயாத்திரை பக்தர்கள்
/
ஒட்டன்சத்திரத்தில் குவிந்த பாதயாத்திரை பக்தர்கள்
ADDED : ஜன 24, 2024 06:21 AM

ஒட்டன்சத்திரம் : ஒட்டன்சத்திரம் வழியாக பழநிக்கு பாதயாத்திரை செல்லும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
பழநி முருகன் கோயிலில் நடக்கும் தைப்பூச திருவிழாவில் கலந்து கொள்வதற்காக திருச்சி, தஞ்சாவூர், புதுக்கோட்டை, காரைக்குடி, மதுரை, தேனி உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து ஆண்டுதோறும் அதிகப்படியான பக்தர்கள் பாதயாத்திரை செல்வது வழக்கம். இந்தாண்டு ஜன. 25ல் தைப்பூசம் நடைபெற உள்ள நிலையில் பாத யாத்திரை பக்தர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்தபடி உள்ளது. பல்வேறு வழித்தடங்களில் இருந்து வரும் பக்தர்கள் ஒட்டன்சத்திரத்தில் இருந்து ஒரே வழித்தடத்தில் தான் பழநிக்கு செல்ல முடியும். இதனால் மற்ற இடங்களை காட்டிலும் ஒட்டன்சத்திரத்தில் இருந்து பழநிக்கு செல்லும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும். நேற்று ஆயிரக்கணக்கான பக்தர்கள் பாதயாத்திரை சென்றனர். இதனால் ஒட்டன்சத்திரம் பழநி ரோட்டில் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்து காணப்பட்டது. பல இடங்களில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

