/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
பிள்ளைமார் பெருமக்கள் பேரவை பொதுக்குழு
/
பிள்ளைமார் பெருமக்கள் பேரவை பொதுக்குழு
ADDED : அக் 14, 2024 09:11 AM

திண்டுக்கல் : திண்டுக்கல் பி.எஸ்.என்.ஏ., மஹாலில் திண்டுக்கல் அனைத்து பிள்ளைமார் பெருமக்கள் பேரவையின் ஆண்டு பொதுக்குழு கூட்டம் கவுரவத் தலைவர் ரகுராம் தலைமையில் நடந்தது.
பேரவைத் தலைவர் சந்திரன், செயலாளர் பாஸ்கர், பொருளாளர் சண்முகவேல், துணைத்தலைவர்கள் பிச்சை மாணிக்கம்பிள்ளை, எலைட் பாலசுந்தர், துணைச் செயலாளர்கள் பத்மநாபன், பெரியசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். அங்கிங்கு செல்ல முத்தையா, சந்திரன், கவுரவ ஆலோசகர் எஸ்.கே.சி., குப்புசாமி, மேயர் இளமதி, முன்னாள் மேயர் மருதராஜ், முன்னாள் எம்.எல்.ஏ., பிரேம்குமார் பங்கேற்றனர்.வ.ஊ.சி.சிலை அருகில் ஆக்கிரமிப்பு அகற்றிட மாநகராட்சி ஆவண செய்ய வேண்டும்.மாவட்டம் முழுமைக்கும் உறுப்பினர் சேர்க்கையை விரைவு படுத்தல், மாவட்டத்தில் செயல்படும் வெள்ளாளர் அமைப்புகள் அனைத்தும் ஓர் அமைப்பின் கீழ் செயல்படுவது, எதிர்கால அரசியல் திட்டங்களை ஆராய்ந்து ஒன்றுபட்டு முடிவு செய்தல்என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. நிகழ்ச்சியை டாக்டர் பெரியதம்பி ஒருங்கிணைத்தார்.