தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ பைரவருக்கு தேய்பிறை அஷ்டமி வழிபாடு

பைரவருக்கு தேய்பிறை அஷ்டமி வழிபாடு

பைரவருக்கு தேய்பிறை அஷ்டமி வழிபாடு


ADDED : பிப் 21, 2025 06:29 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 21, 2025 06:29 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

திண்டுக்கல்: தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு திண்டுக்கல் மாவட்ட கோயில்களில் பைரவருக்கு சிறப்பு வழிபாடுகள் நடந்தது. ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.

திண்டுக்கல் பத்மகிரீஸ்வரர் அபிராமியம்மன் கோயில், கூட்டுறவுநகர் செல்வவிநாயகர் கோயில், ஜான்பிள்ளை சந்து வாராகி அம்மன் கோயிலில் பைரவர் சன்னதியில் தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு சிறப்பு பூஜை, அபிஷேகம் நடந்தது.

தாடிக்கொம்பு சவுந்திர ராஜப்பெருமாள் கோயிலில் சொர்ண ஆகர்ஷன பைரவருக்கு இளநீர், தேன், சந்தனம், மஞ்சள், திருமஞ்சனப் பொடி உள்ளிட்ட பொருட்களால் 16 வகை அபிஷேகம் நடந்தது.

6 கால பூஜைகள் நடந்தது. சுவாமிக்கு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. கோவை, வெள்ளக்கோவில், திருப்பூர், ஈரோடு, கரூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த பக்தர்கள் தரிசனம் செய்தனர். அறங்காவலர் குழு தலைவர் விக்னேஷ் பாலாஜி, அறங்காவலர்கள், பட்டாச்சாரியார்கள் ரமேஷ், ராமமூர்த்தி, மணியம் அரவிந்தன் செய்திருந்தனர்.

சின்னாளபட்டி : தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு சின்னாளபட்டி அஞ்சலி வரத ஆஞ்சநேயர் கோயிலில் சிறப்பு பூஜை நடந்தது. மூலவருக்கு திரவிய அபிஷேகத்துடன் சிறப்பு மலர் அலங்காரம் செய்யப்பட்டது.

அஷ்டோத்திர பூஜை, மகா தீபாராதனையும் நடந்தது. செம்பட்டி கோதண்டராமர் கோயில், கசவனம்பட்டி மவுனகுரு சுவாமி கோயிலில் சிறப்பு அபிஷேகம், தீபாராதனையும் நடந்தது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us