/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
பயணியர் நிழற்குடை இல்லாத நிறுத்தங்களில் மக்கள் பரிதவிப்பு; 'பஸ் பே'யும் இல்லாததால் விபத்துக்களும் அதிகரிப்பு

ADDED : டிச 28, 2024 07:23 AM

மாவட்டத்தில் நான்கு வழிச்சாலைகள் அமையும் முன்பு டவுன் பஸ்கள் நின்று செல்லும் பெரும்பாலான இடங்களில் நிழற்குடைகள் இருந்தன. நான்கு வழிச்சாலை பணியில் அவை இடிக்கப்பட்டு தற்போது பல கி.மீ., துார இடைவெளியில் ஒருசில இடங்களில் மட்டுமே பயணியர் நிழற்குடைகள் உள்ளன.
திருச்சி நான்கு வழிச்சாலையை பொறுத்தவரை திண்டுக்கல் மாவட்ட எல்லைக்குள் தங்கம்மாபட்டி, அய்யலுார், கொல்லப்பட்டி, ஆண்டிமாநகர், தாமரைப்பாடி, முள்ளிப்பாடி, மா.மூ.கோவிலுார் பிரிவு ஆகிய 8 இடங்களில் மட்டுமே பயணியர் நிழற்குடைகள் அமைக்கப்பட்டுள்ளன. இங்கு மட்டும் டவுன் பஸ்கள் ஒதுங்கி நின்று செல்ல வசதியாக ஒதுங்குதளம் (பஸ் பே) அமைக்கப்பட்டுள்ளது.
இந்த நிறுத்தங்கள் தவிர திருச்சி ரோட்டில் மட்டும் நிழற்குடை, 'பஸ் பே' இல்லாமல் 15 டவுன் பஸ் நிறுத்தங்கள் உள்ளன. இதே நிலை தான் மதுரை, நத்தம், பழநி, கரூர் ரோடுகளிலும் உள்ளது. இங்கெல்லாம் பயணிகள் வெயில், மழைக்கு ஒதுங்கி நிற்க எந்த வசதியும் இல்லை.
இவ்விடங்களில் பஸ்கள் ரோட்டிலே நின்று செல்லும்போது பின்னால் வரும் வாகனங்கள் மோதி விபத்து ஏற்படுகின்றன. விபத்துக்கள் நடந்த விதம், காரணம் குறித்து ஆய்வு செய்தால் 'பஸ் பே' இல்லாததால் ஏற்பட்டவை அதிகம் என்பதை கண்டறியலாம்.
இனியும் அலட்சியம் செய்யாமல் எல்லா பஸ் நிறுத்தங்களிலும் நிழற்குடை,'பஸ் பே' வசதிகளை ஏற்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.