/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
நிழற்குடையை மறைத்து டூவீலர்களை நிறுத்துவதால் பரிதவிப்பு
/
நிழற்குடையை மறைத்து டூவீலர்களை நிறுத்துவதால் பரிதவிப்பு
நிழற்குடையை மறைத்து டூவீலர்களை நிறுத்துவதால் பரிதவிப்பு
நிழற்குடையை மறைத்து டூவீலர்களை நிறுத்துவதால் பரிதவிப்பு
ADDED : அக் 16, 2024 06:06 AM

மரத்தால் விபத்து அபாயம் : எரியோடு -திண்டுக்கல் ரோட்டில் பட்டுப்போன மரத்தால் விபத்து அபாயம் உள்ளது.போக்குவரத்து அதிகம் உள்ள பகுதியில் மரம் உள்ளதால் விபத்து ஏற்படும் முன் மரத்தை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
--இஸ்மாயில், எரியோடு.
நிழற்குடை மறைப்பு : திண்டுக்கல் அரசு மருத்துவமனை அருகே உள்ள நிழற்குடையை மறைத்து டூ வீலர்களை நிறுத்துவதால், பயணிகள் மழை நேரங்களில் ஒதுங்க நிழற்குடைக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது .இத்ன மீது நடவடிக்கை வேண்டும்.
-ஜெயக்குமார், திண்டுக்கல்.
மழைநீருடன் கழிவுநீர் : திண்டுக்கல் நாகல்நகர் ரவுண்டானா அருகே மழைநீருடன் கழிவுநீர் தேங்கி நிற்பதால் சுகாதாரக் கேடு ஏற்படுகிறது.பஸ் ஸ்டாப் அருகே இப்பதால் பயணிகளுக்கு பாதிப்பு ஏற்படுகிறது .கழிவு நீர் தேங்காமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-குமரன், நாகல்நகர்.
கரூர் ரோட்டில் கழிவு நீர் : திண்டுக்கல் - பழைய கரூர் ரோட்டில் கழிவு நீர் செல்ல வழி இல்லாமல் ரோட்டில் செல்வதால் துர்நாற்றம் வீசுகிறது. இதனால் கொசுக்கள் உற்பத்தியாகும் இடமாக இருப்பதால் கழிவுநீர் ரோட்டில் செல்வதை தடுக்க வேண்டும்.
-ஈஸ்வரன், திண்டுக்கல்.
ரோடு சேதத்தால் பள்ளம் : அம்மையநாயக்கனுார் கிராம நிர்வாக அலுவலர் ,வருவாய் ஆய்வாளர் அலுவலகத்திற்கு செல்லும் பாதையில் ரோடு சேமடைந்து பள்ளம் ஏற்பட்டு கான்கிரீட் கம்பி வெளியே தெரிகிறது . விபத்து முன் சீர் செய்ய வேண்டும்.
-பழனிச்சாமி, அம்மைநாயக்கனுார்.
விபத்து அபாயம் : கொடைக்கானல் கோகினுார் அரசு விடுதி,குறிஞ்சியாண்டவர் கோயில் செல்லும் ரோட்டில் விபத்தை ஏற்படுத்தும் நிலையில் உள்ள மின்கம்பத்தை மாற்றியமைக்க, மின் துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-எஸ். வெற்றிவேல், கொடைக்கானல்.
குப்பையால் பாதிப்பு : தாராபுரம்- ஒட்டன்சத்திரம் ரோட்டில் இருந்து திண்டுக்கல் செல்லும் சர்வீஸ் ரோட்டின் வடபுறத்தில் வடிகால் சுற்றி குப்பை கொட்டப்படுவதால் சுகாதாரம் பாதிக்கப்படுகிறது. இவற்றை அப்புறப்படுத்தி இங்கு குப்பை கொட்டுவதை தடுக்க வேண்டும்.
--சித்தார்த்,ஒட்டன்சத்திரம்.