/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
பழநியில் 300 கேமராக்கள் பொருத்த திட்டம்
/
பழநியில் 300 கேமராக்கள் பொருத்த திட்டம்
ADDED : செப் 20, 2024 06:10 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பழநி : பழநி நகர் பகுதிகளில் பழநி எம்.எல்.ஏ, திண்டுக்கல் எம்.பி., நிதியில் 300 கண்காணிப்பு கேமரா பொருத்த போலீசார் திட்டமிட்டு உள்ளனர்.
பழநி நகர் பகுதிகளில் குற்றச் சம்பவங்கள் தடுக்கவும், குற்றவாளிகளை கண்டறியவும் கண்காணிப்பு கேமரா முக்கிய பங்காற்றி வருகிறது. அதன்படி பழநி எம்.எல்.ஏ., செந்தில்குமார் தொகுதி மேம்பாட்டு நிதி, திண்டுக்கல் எம்.பி.,சச்சிதானந்தம் தொகுதி மேம்பாட்டு நிதி மூலம் பழநி நகர் பகுதியில் 300 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த திட்டமிடப்பட்டுள்ளது. விரைவில் இதற்கான பணிகள் துவங்க உள்ளன.