/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
சிமென்ட் ஆலையில் மரக்கன்றுகள் நடவு
/
சிமென்ட் ஆலையில் மரக்கன்றுகள் நடவு
ADDED : செப் 20, 2024 05:52 AM

குஜிலியம்பாறை : குஜிலியம்பாறை கரிக்காலி செட்டிநாடு சிமென்ட் ஆலையில் ஓசோன் தினத்தை முன்னிட்டு மரக்கன்று நடும் விழா நடந்தது. தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் திண்டுக்கல் மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் குணசேகரன் துவக்கி வைத்தார். ஆலையின் இணைத்தலைவர் கிருஷ்ணன் பேசினார்.
ஓசேன் தினத்தை முன்னிட்டு ஆலை வளாகம், ஆலை குடியிருப்பு பகுதி, சுரங்க பகுதிகள் என ஆயிரம் மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டன.
சுற்றுச்சூழல் பராமரிப்பு உறுதி மொழியும் எடுக்கப்பட்டது.
நடப்பு ஆண்டில் 5 ஆயிரம் மரக்கன்றுகள் நட நிர்வாகம் தீர்மானித்துள்ளது. செட்டிநாடு சிமென்ட் ஆலையில் 24 ஆண்டுகளில் ஒரு லட்சத்து 25 ஆயிரம் மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டு நன்கு பராமரிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.