/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
மெயின் ரோட்டில் செடிநட்ட பா.ஜ.,வினர்
/
மெயின் ரோட்டில் செடிநட்ட பா.ஜ.,வினர்
ADDED : பிப் 18, 2024 01:18 AM

ஆயக்குடி: பழநி ஆயக்குடி புது பஸ்ஸ்டாண்ட் அருகே பல மாதங்களாக குடிநீர் குழாய் உடைந்து தண்ணீர் வீணாகி பழநி மெயின் ரோட்டில் செல்கிறது. பல்வேறு தரப்பினர் குறிப்பிட்ட துறை அதிகாரிகளிடம் முறையீடு செய்தனர். ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்காததால் அந்த பகுதியில் பயணிக்கும் இருசக்கர வாகன ஓட்டிகள், பாதசாரிகள் சிரமம் அடைந்தனர்.
நெடுஞ்சாலையில் தண்ணீர் குளம் போல் காணப்பட்டதால் சிறு விபத்துக்கள் ஏற்பட்டன இந்நிலையில் ஆயக்குடி பா.ஜ.,பேரூர் தலைவர் வீரபாண்டியன் தலைமையில் தண்ணீர் தேங்கிய ரோடு பகுதியில் செடிகளை நட்டு நுாதன போராட்டம் நடத்தினர். பா.ஜ., ஒன்றிய தலைவர் பிரகாஷ் , ஒன்றிய செயலாளர் சுப்பிரமணி, ஊடக பிரிவு ஒன்றிய தலைவர் செல்வராஜ் கலந்து கொண்டனர்.