நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டுக்கல் : திண்டுக்கல் மாநகராட்சி கமிஷனர் ரவிச்சந்திரன் உத்தரவில் நகர் நல அலுவலர் பரிதாவாணி,மாசுக்கட்டுப்பாட்டு வாரிய உதவி செயற்பொறியாளர் உஷாராணி,மாநகராட்சி சுகாதார அலுவலர் விஜய்ஆனந்த்,சுகாதார ஆய்வாளர்கள் லீலாபிரியா,கேசவன் உள்ளிட்ட அதிகாரிகள் திண்டுக்கல் பெரியகடை வீதிகளில் ஆய்வு செய்தனர்.
30 கடைகளில் நடந்த ஆய்வில் 7 கடைகளில் 40 கிலோ பிளாஸ்டிக் பதுக்கப்பட்டிருந்தது தெரிந்தது. அதிகாரிகள் அதை பறிமுதல் செய்து ரூ.4 ஆயிரம் அபராதம் விதித்தனர்.

