/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
மழையால் தேக்கமான பிளாஸ்டிக் குடங்கள்; குமுறும் உற்பத்தியாளர்கள்
/
மழையால் தேக்கமான பிளாஸ்டிக் குடங்கள்; குமுறும் உற்பத்தியாளர்கள்
மழையால் தேக்கமான பிளாஸ்டிக் குடங்கள்; குமுறும் உற்பத்தியாளர்கள்
மழையால் தேக்கமான பிளாஸ்டிக் குடங்கள்; குமுறும் உற்பத்தியாளர்கள்
ADDED : டிச 30, 2024 06:41 AM

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டத்தில் விற்பனைக்காக தயார் செய்யப்பட்டிருந்த பிளாஸ்டிக் குடங்கள் மழையின் காரணமாக விற்காது தேக்கமானதால் பெரும் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக உற்பத்தியாளர்கள் கூறினர்.
திண்டுக்கல் நத்தம் ரோடு மாவட்ட தொழில் மையம் உள்ளிட்ட இடங்களில் மொத்தமாகவும், பலர் தனித்தனியாகவும் பிளாஸ்டிக் குடங்கள் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இங்கு தயாரிக்கப்படும் பிளாஸ்டிக் குடங்கள் பெரும்பாலும் ராமநாதபுரம், தேனி, கடலுார் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களுக்கு விற்பனைக்காக செல்கிறது.
வெயில் காலம் போது கிடைக்கும் தண்ணீரை சேகரிக்க பெரும்பாலானோர் பிளாஸ்டிக் குடங்கள், பேரல்களை வாங்குவர்.
இங்கு தயாரிக்கப்படும் பிளாஸ்டிக் குடங்களானது டிசம்பர் முதலே வெளி மாவட்டங்களுக்கு அனுப்ப படும். இதன் விற்பனை ஜனவரி 2வது வாரம் முதல் மே மாதம் இறுதி வரை இருக்கும்.
ஓரிரு மாதமாக பெய்த மழையால் குடங்களை மொத்தமாக வாங்கவரும் வெளியூர் வியாபாரிகள் வரவில்லை.
அதே நேரத்தில் இங்கிருந்து எடுத்து சென்று விற்பனை செய்து விட்டு மீண்டும் வந்து கொள்முதல் செய்யும் உள்ளூர் வியாரிகளின் எண்ணிக்கையும் குறைந்த விட்டது. இதனால் உற்பத்தி குடங்கள் தேக்கமாகி உள்ளன. இதனால் உற்பத்தியாளர்கள் ெபரும் நஷ்டத்திற்கு உள்ளாகி உள்ளனர்.
பிளாஸ்டிக் குடங்கள் தயாரிக்கும் உரிமையாளர்கள் கூறியதாவது : கடலுார் மாவட்டங்களில் பெய்த மழையால் அங்கு ஒரு குடம் கூட செல்லவில்லை. குறிப்பாக, தென் மாவட்டங்களில் ராமநாதபுரம் மாவட்டத்தில் தான் அதிக விற்பனை இருக்கும்.
இந்த முறை அங்கும் நல்ல மழை பெய்ததால் பிளாஸ்டிக் குடங்களின் விற்பனை வெகு மந்தமாகி விட்டது. குடங்களை எடுத்துச் சென்ற ஒரு சில வியாபாரிகள் கொண்டு சென்ற குடங்களே விற்பனையாகவில்லை என தெரிவிக்கின்றனர். 5 ஆயிரம் குடங்கள் செல்லும் இடத்தில் 1000 குடங்கள் கூட விற்பனையாகவில்லை. தற்போது தான் வெயிலடிக்கத் தொடங்கி உள்ளதால் ஓரிரு மாதங்களில் விற்பனை அதிகரிக்கும் என நம்புகிறோம். தற்போது உற்பத்தியை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளோம் என்றனர்.