/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
மனசு வையுங்க சார்: மாவட்டத்தில் இல்லை போதுமான மழை மானி: குக்கிராமத்திலும் நிறுவ விவசாயிகள் எதிர்பார்ப்பு
/
மனசு வையுங்க சார்: மாவட்டத்தில் இல்லை போதுமான மழை மானி: குக்கிராமத்திலும் நிறுவ விவசாயிகள் எதிர்பார்ப்பு
மனசு வையுங்க சார்: மாவட்டத்தில் இல்லை போதுமான மழை மானி: குக்கிராமத்திலும் நிறுவ விவசாயிகள் எதிர்பார்ப்பு
மனசு வையுங்க சார்: மாவட்டத்தில் இல்லை போதுமான மழை மானி: குக்கிராமத்திலும் நிறுவ விவசாயிகள் எதிர்பார்ப்பு
ADDED : டிச 24, 2024 05:16 AM

கொடைக்கானல்: திண்டுக்கல் மாவட்டத்தில் பெய்யும் மழை அளவை துல்லியமாக கணக்கிட குக்கிராம பகுதிகளிலும் மழை மானிகளை நிறுவ விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மாவட்டத்தை பொருத்தமட்டில் கொடைக்கானல், தாண்டிக்குடி, ஒட்டன்சத்திரம், வேடசந்துார், பழநி, சிறுமலை, கன்னிவாடி, நிலக்கோட்டை, வடமதுரை உள்ளிட்ட பகுதிகளில் ஏராளமான ஏக்கரில் காய்கறி,மலைப் பயிர்கள், வாசனைப் பயிர்கள், பந்தல் சாகுபடி செய்யப்படுகிறது. மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் இயல்பாக வடகிழக்கு , தென்மேற்கு பருவமழை நன்கு பெய்வது வழக்கம். இதை கணக்கிட்டு சில மாதங்களுக்கு பாசனம் மானவரி சாகுபடிகளை விவசாயிகள் தேர்வு செய்வர். தற்போது மாறி வரும் சீதோஷ்ண நிலையில் பருவநிலை மாற்றத்தால் குறிப்பிட்ட பட்டத்தில் சாகுபடி செய்ய முடியாத சூழல் நிலவி வருகிறது.மேலும் அவ்வப்போது மேக வெடிப்புகள் ஏற்பட்டு கூடுதல் மழை பொழிவும் பல்வேறு இடங்களில் வறட்சியும் நீடிக்கிறது.இதை துல்லியமாக கணக்கிட முடியாத நிலையில் மலைப் பயிர்கள், வாசனை பயிர்கள் சாகுபடி செய்வதில் இடையூறுகள் ஏற்படுகிறது.இந்நிலையை தவிர்க்க துவக்கத்தில் வட்டார அளவில் பெய்யும் மழை அளவை துல்லியமாக கணக்கீடு செய்ய மழைமானிகள் ஆங்காங்கே நிறுவப்பட்டன. தற்போது மாவட்டத்தில் பத்துக்கும் குறைவான இடத்தில் மட்டுமே உள்ளது. மேலும் இங்குள்ள ஆராய்ச்சி நிலையங்களில் உள்ள தானியங்கி வானிலை மையங்கள் செயல்படற்ற சூழலில் உள்ளது.இதை தவிர்க்க கிராமப் பகுதிகளிலும் மழையளவை அளவீடு செய்து சாகுபடி பருவத்திற்கு ஏற்றவாறு பயிர் செய்ய நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய மழை மானி கருவிகளை அமைக்க வேண்டும்.
............
முக்கியத்துவம் அளியுங்க
மாவட்டத்தில் தோட்டக்கலைத்துறை, காபி ஆராய்ச்சி நிலையம், வாசனை பயிர்கள் வாரியம் உள்ளிட்ட பிற துறைகள் செயல்படுகின்றன.இத்துறைகள் தங்களது கட்டுப்பாட்டில் உள்ள குக் கிராமப் பகுதிகளிலும் மழை அளவை கணக்கீடு செய்ய நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய மழை மானிகளை நிறுவ வேண்டும்.இதன் மூலம் மழையளவை துல்லியமாக கணக்கீடு செய்து தகுந்த பயிர்களை சாகுபடி செய்ய ஏதுவாக இருக்கும். மாவட்ட நிர்வாகம் இதற்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும்.
விவேகானந்தன், விவசாயி, மன்னவனுார் .
...............