/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
பிளஸ்- 1, -2 செய்முறை தேர்வு தொடங்கியது
/
பிளஸ்- 1, -2 செய்முறை தேர்வு தொடங்கியது
ADDED : பிப் 13, 2025 05:53 AM
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டத்தில் 154 மையங்களில் பிளஸ்-1, பிளஸ்-2 மாணவர்களுக்கான செய்முறை தேர்வு தொடங்கியது.
பிளஸ்-1, பிளஸ்-2 பொதுத்தேர்வு அடுத்த மாதம்தொடங்குகிறது. மாவட்டத்தில் 217 பள்ளிகளில் பிளஸ்-2ல் 21,817, பிளஸ்- 1 ல் 22,216 மாணவர்களும் தேர்வு எழுதுகின்றனர். இதற்காக 86 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் பிளஸ்-1, பிளஸ்-2 மாணவர்களுக்கான செய்முறை தேர்வு நேற்று தொடங்கியது.
பிப். 21 வரை நடக்கும் இதில் 154 மையங்களில் நேற்று இயற்பியல், வேதியியல், தாவரவியல் உள்ளிட்ட பாடங்களுக்கான செய்முறை தேர்வு நடைபெற்றது.இதில் பிளஸ்-1ல் 13730, பிளஸ்-2ல் 12,637 பேர் தேர்வு எழுதினர்.