ADDED : ஏப் 30, 2025 05:55 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டுக்கல்; திண்டுக்கல்லில் போக்சோ வழக்கில் கைதானவருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
திண்டுக்கல் பகுதியில் 2024ல் 13 வயது இரு சிறுமிகளை ஆபாச வார்த்தைகளால் பேசி மிரட்டல் விடுத்த நத்தம் செந்துறை பகுதியை சேர்ந்த ஆண்டிச்சாமியை 60, திண்டுக்கல் ஊரக மகளிர் போலீசார் போக்சோ வழக்கில் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.இவ்வழக்கு திண்டுக்கல் போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்றது.
விசாரித்த நீதிபதி வேல்முருகன் ,குற்றம்சாட்டப்பட்ட ஆண்டிச்சாமிக்கு 10 ஆண்டு சிறை தண்டனை, ரூ. 57 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பு வழங்கினார்.