/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
சுற்றுச்சுவர் இல்லாத சுகாதார நிலையத்தில் உலாவரும் விஷ ஜந்துக்கள்
/
சுற்றுச்சுவர் இல்லாத சுகாதார நிலையத்தில் உலாவரும் விஷ ஜந்துக்கள்
சுற்றுச்சுவர் இல்லாத சுகாதார நிலையத்தில் உலாவரும் விஷ ஜந்துக்கள்
சுற்றுச்சுவர் இல்லாத சுகாதார நிலையத்தில் உலாவரும் விஷ ஜந்துக்கள்
ADDED : ஆக 24, 2025 03:44 AM

-வடமதுரை: பிலாத்து அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சுற்றுச்சுவர் இல்லாததால் படையெடுக்கும் பாம்புகளால் நோயாளிகள், பணியாளர்கள் அச்சத்துடன் உள்ளனர்.
வடமதுரை ஒன்றியம் பிலாத்தில் கொம்பேறிபட்டி ரோட்டில் வரட்டாறு அருகில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அமைந்துள்ளது. நுழைவாயில் பகுதியில் மட்டுமே சுவர் கட்டப்பட்டுள்ளது. பக்கவாட்டிலும் பின்பகுதியிலும் சுற்றுச்சுவர் இல்லாததால் பலவித பிரச்னைகளை இங்குள்ளவர்கள் எதிர்கொள்கின்றனர். ஓடைக்குள் புதர்கள் அதிகம் இருப்பதால் பாம்பு உள்ளிட்ட விஷ பூச்சிகள் அடிக்கடி சுகாதார நிலைய வளாகத்திற்குள் வருகின்றன. இதனால் இங்கு பிரசவத்திற்காக தங்கும் நோயாளிகள், உதவியாளர்கள், மருத்துவ பணியாளர்கள் என அனைவரும் ஒருவித அச்சத்துடன் பாதுகாப்பற்ற நிலையில் உள்ளனர். சில மாதங்களுக்கு முன்பு இங்கு விஷப்பாம்பு கிணற்றில் தங்கியிருப்பது கண்டறிந்து தீயணைப்பு வீரர்கள் வந்து அப்புறப்படுத்தியது குறிப்பிடதக்கது. முன்னுரிமை அடிப்படையில் பிலாத்து அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சுற்றுச்சுவர் கட்ட மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-குடிநீர் தொட்டி அகற்றம் ஏ.ரமேஷ், சமூக ஆர்வலர், பிலாத்து: சுற்றுப்பகுதியில் கால்நடைகள் அதிகம் இருக்கும் நிலையில் சுகாதார நிலையத்திற்கு சுற்றுச்சுவர் இல்லாததால் வளாகத்தில் மரம், பூங்கா செடிகள் வளர்ப்பதிலும் சிக்கல் உள்ளது. பாம்புகளும் அதிகளவில் ஓடையில் இருந்து சுகாதார நிலையத்திற்குள் புகுவதற்காக சுலபமாக உள்ளது. சுகாதார நிலையத்திற்காக முன்புறத்தில் அமைக்கப்பட்ட குடிநீர் தொட்டி தற்போது அகற்றப்பட்டுள்ளது. இதை மீண்டும் அங்கு வைக்க வேண்டும்.
-கழிப்பறை இல்லை எஸ்.சரவணன், பால் வியாபாரி, பிலாத்து: சுகாதார நிலையத்திற்கு உள்பகுதியிலும் வெளிப்புறத்திலும் மின்விளக்கு வசதியை அதிகப்படுத்த வேண்டும். இப்பகுதியில் மக்கும், மக்காத குப்பையை தனித்தனியே சேகரிக்க தொட்டிகளை ஊராட்சி நிர்வாகம் வைக்க வேண்டும் உள்நோயாளிகள் இருக்கும் பகுதியில் மட்டுமே கழிப்பறை வசதி உள்ளது. கூடுதலாக ஒரு கழிப்பறை கட்டி தர வேண்டும். முன்னுரிமை அடிப்படையில் சுற்றுச்சுவர் திட்டத்தை செயல்படுத்த வேண்டும்.