/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
குற்றவாளிகள் நடமாட்டத்தை கண்டறிய புதிய செயலி; விடுதி உரிமையாளர்களுக்கு ஆலோசனை வழங்கிய போலீசார்

ADDED : ஏப் 27, 2025 05:42 AM
பழநி :  பழநி பகுதியில் உள்ள விடுதி உரிமையாளர்களுக்கு குற்றவாளிகள் நடமாட்டத்தை கண்காணிக்க செயல்படுத்த உள்ள புதிய செயலி குறித்து ஆலோசனைகளை போலீசார்  வழங்கினர்.
பழநி பகுதியில் உள்நாடு, வெளிநாடு  என பக்தர்கள், சுற்றுலாப் பயணிகள் நாள்தோறும் வருகின்றனர் .
விடுதியில் தங்குவோருக்கு   குற்றப் பின்னணி இருக்கும் நிலையில் போலீசார் அதை எளிதில் கண்டறிய புதிய செயலி அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இது குறித்த ஆலோசனைக் கூட்டம்  இன்ஸ்பெக்டர் மணிமாறன் தலைமையில்  பழநியில் நடைபெற்றது.
சி.வி.ஆர். எம்.எஸ்., செயலி குறித்து எடுத்துரைக்கப்பட்டது.   விடுதிகளில் தங்க வரும் குற்றப் பின்னணி உள்ள நபர்கள் அறை எடுக்கும் சூழலில் அவர்கள் தரும் ஆதார்  எண்ணை பதிவு செய்தால்  குற்ற பின்னணி குறித்து போலீசார் எளிதில் கண்டறிய இயலும்.  புதிதாக தொடங்கப்பட உள்ள செயலியில் ஆதார் எண்ணை பதிவு செய்வது குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது.
இளம் பெண்களுடன் வருபவர்கள், மது அருந்திவிட்டு வருபவர்களுக்கு விடுதியில் இடம் அளிக்கக்கூடாது.
உரிய ஆவணங்களை பெற்ற பிறகு தான்  இடம் அளிக்க வேண்டும் .சந்தேகப்படும் வகையிலான நபர்கள் விடுதியில் அரை எடுத்தால் உடனடியாக போலீசாருக்கு தகவல் அளிக்க வேண்டும் என்பன  உள்ளிட்ட அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டன. இதில் எஸ்.ஐ., ராஜ்குமரன், விஜய், பழநி நகர லாட்ஜ் ஓனர் வெல் பேர் அசோசியேஷன் உறுப்பினர்கள் , விடுதி உரிமையாளர்கள்  கலந்து கொண்டனர்.