/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
ஹிந்து மக்கள் கட்சி நிர்வாகி போராட்டத்தால் சீட்டு விளையாடியவர்களை பிடித்தது போலீஸ்

ADDED : ஏப் 04, 2025 05:26 AM

வேடசந்துார்: வேடசந்துார் பகுதியில் முறையான அரசு அனுமதி இன்றி சீட்டாட்டம் நடைபெறுவதாகவும் இதனால் பல குடும்பங்கள் பாதிக்கப்படுவதாகவும் கூறி ஹிந்து மக்கள் கட்சியின் முழு நேர ஊழியர் ராமச்சந்திரன் மாரியம்மன் கோவில் தெருவில் உள்ள கட்சி அலுவலகத்தில் சீட்டு மாலை அணிந்து போராட்டத்தில் ஈடுபட்டார்.
இதைத்தொடர்ந்து வேடசந்துார் இன்ஸ்பெக்டர் வேலாயுதம் தலைமையிலான போலீசார்
அரியபந்தம்பட்டி ரோடு, கே.வி.கே. நகர் பகுதியில் பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்ட ஒட்டன்சத்திரம் கேதையுறும்பு செந்தில்குமார் 45, வடமதுரை அண்ணா நகர் சவுந்திரராஜன் 43, வைரக்கவுண்டனுார் ராஜலிங்கம் 51, , அருண்குமார் 30, ஆகிய நான்குபேரை கைது செய்து சீட்டு கட்டுகள், பணத்தை பறிமுதல் செய்தனர்.