விபத்தில் மாணவிகள் காயம்
திண்டுக்கல்: திண்டுக்கல் பஸ் ஸ்டாண்டிலிருந்து வேலசேர்வைக்காரன் பட்டிக்கு அரசு பஸ் ஒன்று நேற்று மாலை புறப்பட்டது. தாடிக்கொம்பு பகுதியை சேர்ந்த டிரைவர் ஜோசப் ஓட்டினார். பழநிரோடு முருகபவனம் அருகே வந்தபோது லாரி ஒன்று குறுக்கே வந்தது. அப்போது அரசு பஸ் லாரி மீது மோதியது. 2 பள்ளி மாணவிகள் காயமடைந்தனர். மேற்கு போலீசார் விசாரித்தனர்.
முதியவர் தற்கொலை
நத்தம்: கொண்டையம்பட்டியை சேர்ந்தவர் ராமசாமி 64. வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தார். வாழ்க்கையில் வெறுப்படைந்த விஷம் குடித்து தற்கொலை செய்தார். நத்தம் இன்ஸ்பெக்டர் தங்க முனியசாமி விசாரிக்கிறார்.
குட்கா பதுக்கிய இருவர் கைது
திண்டுக்கல்: இ.பி., காலனி அங்கன்வாடி மையம் அருகே பெரிய கோட்டையைச் சேர்ந்த ஆனந்தராஜ், என்.ஜி.ஓ., காலனியை சேர்ந்த லட்சுமணன் குட்கா பதுக்கி வைத்திருந்தனர். தாடிக்கொம்பு போலீசார் இருவரையும் கைது செய்து 30 கிலோ குட்காவை பறிமுதல் செய்தனர். தப்பிய இ.பி., காலனி கார்த்திக் குமார், ஆர்.எம்., காலனி சரவணனை தேடி வருகின்றனர்.
கஞ்சா விற்றவர் கைது
நெய்க்காரப்பட்டி: நெய்க்காரப்பட்டி அருகே கே.வேலுார் பகுதியைச் சேர்ந்த ஆறுமுகம் 62, கஞ்சா விற்றார். இவரை பழநி தாலுகா போலீசார் கைது செய்தனர்.