ADDED : பிப் 18, 2025 05:26 AM
பெண்ணை வெட்டியவர் கைது
சாணார்பட்டி: கூ.குரும்பபட்டியை சேர்ந்தவர் கூலித்தொழிலாளி முனியப்பன். இவரது மனைவி சின்னதாய் 35. முனியப்பனுக்கும் அவரது தம்பி காளியப்பன் 32, இடையே இடப்பிரச்னை இருந்து வந்தது. நேற்று காலை முனியப்பன் வீட்டிற்கு வந்த காளியப்பன் வீட்டின் முன் துணி துவைத்துக் கொண்டிருந்த அவரது அண்ணி சின்னத்தாயை அவதுாறாக பேசி அரிவாளால் வெட்டினார். சின்னதாய் காயமடைந்தார். சாணார்பட்டி எஸ்.ஐ., பொன் குணசேகரன் காளியப்பனை கைது செய்தார்.
சூதாடிய 5 பேர் கைது
வடமதுரை: புத்துார் கோட்டைக்கல் பகுதியில் வடமதுரை எஸ்.ஐ., பாண்டியன், ஏட்டு ஆரோக்கியதாஸ் ரோந்து சென்றனர். முடிமலை அடிவாரத்தில் பணம் வைத்து சூதாடிய புத்துாரை சேர்ந்த தொ.பெருமாள் 36, அழகர் 27, அழகுமூர்த்தி 31, முருகன் 36, அ.பெருமாள் 60 ,ஆகியோரை கைது செய்தனர்.