ADDED : பிப் 21, 2025 06:33 AM
அலைபேசி மீட்பு
திண்டுக்கல்: மதுரையை சேர்ந்தவர் சையது இப்ராஹிம்38. திண்டுக்கல் பெங்களூரு ரயிலில் பயணிக்க திண்டுக்கல் வந்தார். 1வது பிளாட்பாரத்தில் அலைபேசியை மறந்து விட்டு சென்றார். இதை போலீசார் காமராஜ், மதன்ராஜ் மீட்டு சையது இப்ராஹிமுக்கு தெரிவித்தனர். அலைபேசி ஒப்படைக்கப்பட்டது.
மயில் பலி
திண்டுக்கல்: திருச்சியிலிருந்து திருவனந்தபுரம் செல்லும் இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரயில் நேற்று திண்டுக்கல் வந்தது. இன்ஜினில் பெண் மயில் அடிபட்டு இறந்தது. போலீசார் வனத்துறையிடம் ஒப்படைத்தனர்.
மாயமான செயின் மீட்பு
பழநி : முருகன் கோயிலுக்கு சேலம் மாவட்டம் இடைப்பாடியை சேர்ந்த செல்வகணபதி,கலைவாணி தம்பதியர் குழந்தையுடன் வந்தனர். குழந்தையின் இரண்டு பவுன் தங்கச் செயின் மாயமானது. போலீசார் மீட்டு உரியவரிடம் ஒப்படைத்தனர்.
புகையிலை விற்றவர் கைது
வடமதுரை : தென்னம்பட்டி பிரிவு பகுதியில் திண்டுக்கல் நாகல்நகர் முரளிதரன் 46, தடை புகையிலை பாக்கெட்டுகள் விற்பனைக்கு வைத்திருந்தார்.