/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
போலீஸ் செய்திகள் ... பலாத்காரம் செய்தவர் கைது
/
போலீஸ் செய்திகள் ... பலாத்காரம் செய்தவர் கைது
ADDED : ஜன 09, 2024 06:26 AM
பலாத்காரம் செய்தவர் கைது
செந்துறை : செந்துறை அருகே அரவங்குறிச்சியை சேர்ந்தவர் கூலித்தொழிலாளி வைரத்தேவன் 42.அதே ஊரைச் சேர்ந்த மாணவி திண்டுக்கல்லில் உள்ள கல்லுாரியில் படித்து வந்தார்.அவர் வேறு ஒரு வாலிபரை காதலித்து வந்துள்ளார். இவர்கள் 2 பேரும் தனிமையில் பேசிக்கொண்டிருந்ததை வைரத்தேவன் அலைபேசியில் வீடியோ,புகைப்படம் எடுத்து மிரட்டி உள்ளார்.மாணவி அவரது ஆசைக்கு இணங்கி உள்ளார். சாணார்பட்டி இன்ஸ்பெக்டர் விக்டோரியா லுார்துமேரி அவரை கைது செய்தார்.
வேன் கவிழ்ந்து 4 பேர் காயம்
வடமதுரை: தஞ்சாவூர் பட்டுக்கோட்டை அருகே ஆர். எஸ் .பட்டினம் பகுதியை சேர்ந்தவர் சங்கர் 42. குடும்பத்தினர், நண்பர்கள் என 16 பேருடன் பழநி முருகன் கோயிலில் தரிசனம் செய்ய வேனில் வந்தார். பட்டுக்கோட்டை சேதுவாசத்திரம் அஜ்மீர்காஜா 31, ஓட்டினார். நேற்று அதிகாலை 2:00 மணிக்கு திருச்சி திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலை கொல்லப்பட்டி பிரிவு பகுதியில் வரும் போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து ரோட்டில் கவிழ்ந்தது. டிரைவர் அஜ்மீர் ராஜா, சங்கர், கணேசன் 18, ஸ்டீபன் 13, காயமடைந்தனர். வடமதுரை போலீசார் விசாரிக்கின்றனர்.
கடைக்குள் புகுந்த கார்-
கோபால்பட்டி : ஒட்டன்சத்திரத்தை சேர்ந்த இஸ்மாயில் ஓட்டி வந்த கார் கணவாய்பட்டியில்
சாலையோரம் இருந்த மின்கம்பத்தில் மோதி செல்லக்கண்ணு 58, பெட்டிக்கடைக்குள் புகுந்தது. அங்கிருந்த கோவில்பட்டியை சேர்ந்த மூக்கன், செல்லக்கண்ணு படுகாயம் அடைந்தனர். இவர்களை திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சாணார்பட்டி எஸ்.ஐ., முருகேசன் விசாரக்கிறார்.
சப்பாத்தி கடையில் தீ
திண்டுக்கல்: திண்டுக்கல் நகரை சேர்ந்தவர் விஜய் சதீஷ்45. இவருக்கு சொந்தமாக வெள்ளை விநாயகர் கோயில் அருகே சப்பாத்தி கடை உள்ளது. நேற்று அதிகாலையில் தீப்பற்றி எரிந்தது. திண்டுக்கல் தீயணைப்பு துறை வீரர்கள் தீயை அணைத்தனர். ரூ.50 ஆயிரம் பொருட்கள் சேதமானது. வடக்கு போலீசார் விசாரிக்கின்றனர்.
இழந்த பணம் மீட்பு
திண்டுக்கல் : திண்டுக்கல் நகரை சேர்ந்த தனியார் வங்கி ஊழியரிடம் ஆன்லைனில் கமிஷன் அடிப்படையில் வேலை வாங்கி தருவதாக மர்ம நபர்கள் பேசினர். இதை நம்பிய ஊழியர் ,மோசடி நபர்கள் கூறிய வங்கி கணக்கிற்கு ரூ.11.25 லட்சத்தை தவணை முறையில் அனுப்பினார். ஏமாற்றப்பட்டதை உணர்ந்த அவர்,திண்டுக்கல் மாவட்ட சைபர் கிரைம் போலீசில் புகாரளித்தார். இன்ஸ்பெக்டர் மீனா தலைமையிலான போலீசார் பணத்தை மீட்டனர். இதை ஊழியரிடம் எஸ்.பி.,பிரதீப் வழங்கினார்.பெண் பலி
பாலசமுத்திரம்: பழநி ஆலமரத்துகளம் பகுதி சாலை ஓரத்தில் ஈஸ்வரன் மனைவி ஜெகதாம்பாள் 45, நின்றிருந்தார். பழநி நோக்கி வந்த கார் அவர் மீது மோதியதில் இறந்தார். பழநி தாலுகா போலீசார் விசாரிக்கின்றனர்.
டிரான்ஸ்பார்மர்களில் ஆயில் திருட்டு
வேடசந்துார்: வேடசந்துார் கரூர் நெடுஞ்சாலையில் உள்ளது கல்வார்பட்டி. இங்குள்ள மின் டிரான்ஸ்பார்மரில் 250 லிட்டர் ஆயிலை மர்ம நபர்கள் திருடி உள்ளனர்.
இதேபோல் கல்வார்பட்டி வடக்கு பகுதி மின் டிரான்ஸ்பார்மரிலும்
250 லிட்டர் ஆயிலை திரடி உள்ளனர். இதனால் நேற்று மாலை 5:30 மணி முதல் 7:45 மணி வரை மின்வினியோகம் பாதித்தது.
டூவீலர் திருட்டு 2 பேர் கைது
திண்டுக்கல்: நத்தம் பகுதியை சேர்ந்தவர் சரத்குமார்27. ஜன.6ல் திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு டூவீலரில் வந்தார். வெளியில் நிறுத்திய இவரது டூவீலரை கரூரை சேர்ந்த பிரவீன்குமார்27,புதுக்கோட்டையை சேர்ந்த ஜீவா28,இருவரும் திருடினர். வடக்கு போலீசார் இவர்களை கைது செய்தனர்.
பெண்ணிடம் நகை பறிப்பு
திண்டுக்கல்: கோவிந்தாபுரத்தை சேர்ந்த ஓய்வு செவிலியர் ஜாக்குலின்நிர்மலாமேரி60. ஆர்.எம்.காலனி 8 வது கிராஸ் பகுதியில் டூவீலரில் சென்றார். பின் தொடர்ந்து வந்த மர்ம நபர் 5 பவுன் செயினை பறித்தார். நிர்மலாமேரி போராடி செயினை மீட்க முயன்றார். இருந்தாலும் திருட்டு நபர் செயினில் பாதியளவை பறித்து சென்றார். மேற்கு போலீசார் விசாரிக்கின்றனர்.