ADDED : செப் 21, 2024 06:05 AM
பெண்களை படம் எடுத்த தகராறு
வடமதுரை: வடமதுரை ரெட்டியபட்டியை சேர்ந்த பாண்டீஸ்வரி 37. இவர் தனது ஊரை சேர்ந்த தமிழரசியுடன் தாமரைப்பாடி நவீன் நகரில் நடக்கும் கட்டுமான பணியில் கட்டட தொழிலாளியாக வேலை செய்தனர். இவர்களை அதே பகுதி தேவேந்திரன் அலைபேசியில் படம் எடுத்தார். இதை பெண்கள் கண்டித்ததால் ஏற்பட்ட தகராறில் தேவேந்திரன் குடும்பத்தினர் ஒன்றுக்கூடி பாண்டீஸ்வரியை மிரட்டினர். வடமதுரை போலீசார் விசாரிக்கின்றனர்.
விபத்தில் முதியவர் காயம்
தாடிக்கொம்பு: வேடசந்துார் கூத்தாங்கல்பட்டியை சேர்ந்த தனியார் காவலாளி பாலசுப்பிரமணி 67. செட்டிநாயக்கன்பட்டி சத்யா நகர் ரோட்டில் நடந்து சென்றார். அப்போது அவருக்குப் பின்னால் வந்த டூ வீலர் மோதி தலையில் பலத்த ரத்த காயம் ஏற்பட்டு, மதுரை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். டூவீலரில் மோதிய செட்டிநாயக்கன்பட்டி மதனகோபால் மீது, தாடிக்கொம்புஎஸ்.ஐ., பிரபாகரன் வழக்குப்பதிந்து விசாரிக்கிறார்.