கஞ்சா விற்ற இருவர் கைது
வேடசந்துார்: தட்டாரப்பட்டி பிரிவில் கஞ்சா விற்ற எரியோட்டை சேர்ந்த விஜயகுமார் 33, அவரது தம்பி சசிகுமார் 30, ஆகியோரை தனிப்படை போலீசார் கைது செய்து வேடசந்தூர் போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
தடுப்பு கம்பிகள் திருட்டு
வேடசந்துார்: வேடசந்துார் அருகே அழகாபுரி அணை நுழைவு பகுதியில் உள்ளது கருப்பத்தேவனுார். இந்த ஊர் செல்லும் வழியில் குடகனாறு குறுக்கிட ரூ.3.50 கோடியில் பாலம் கட்டப்பட்டது. இப்பணியின்போது கான்கிரீட் முட்டு அடைப்பதற்கான தகடுகள் திருடு போயின. தற்போது பாலம் கட்டி முடித்த நிலையில் ரோட்டோரம் போக்குவரத்து எச்சரிக்கைக்காக 250 ஒளிரும் தகடுகள் பொருத்தப்பட்டன. இதில் 200க்கும் மேற்பட்ட தகடுகள் காணாமல் போனது. கூம்பூர் போலீசார் விசாரிக்கின்றனர்.
போதை நபருக்கு வெட்டு
வத்தலக்குண்டு: ஜி.தும்மலப்பட்டியை சேர்ந்தவர் பிரபு 41. அதே ஊரை சேர்ந்த முருகன் 38, அடிக்கடி மது அருந்திவிட்டு பிரபுவின் தொழுவத்திலிருந்து மாடுகளை அவிழ்த்து விடுவதாக பிரச்னை ஏற்பட்டது. நேற்றும் மடுகளை அவிழ்த்து விட்டப்படி மது போதையில் தகாத வார்த்தைகளால் பேசினார். ஆத்திரத்தில் அரிவாளால் வெட்டியதில் முருகன் காயம் அடைந்தார். வத்தலக்குண்டு போலீசார் விசாரிக்கின்றனர்.
டூவீலர் மோதி மூதாட்டி பலி
ஒட்டன்சத்திரம்: ஒட்டன்சத்திரம் தும்மிச்சம்பட்டியை சேர்ந்த பழனிச்சாமி மனைவி மயிலாத்தாள் 60. நேற்று மதியம் 12:30 மணிக்கு ஒட்டன்சத்திரம் தாராபுரம் ரோட்டை கடக்க முயன்றார். அவ்வழியாக வந்த டூவீலர் மோதியதில் இறந்தார். ஒட்டன்சத்திரம் போலீசார் விசாரிக்கின்றனர்.
கார்,பஸ் மோதி விபத்து
தாடிக்கொம்பு: பெங்களூர் ஹசவன ஹல்லியை சேர்ந்தவர் கணிப்பொறி ஆய்வாளர் பிரிட்டோ மனோகர் 44. இவர் தனது குடும்பம், புதுச்சேரி உறவினர் குடும்பத்தினருடன் காரில் கேரள மாநிலம் காந்தளூர் சென்றனர். திண்டுக்கல் பழநி ரோடு பிரிவு ரோட்டில் செல்ல வேண்டிய இவர்கள் அதை தாண்டி சென்றனர். டிரைவர் சீனிவாசன் காரை பின்னோக்கி எடுத்த போது அவ் வழியாக வந்த அரசு பஸ் முன்புறத்தில் மோதியது. இரு சிறுவர்கள் காயமடைந்தனர். தாடிக்கொம்பு எஸ்.ஐ., பிரபாகரன் விசாரிக்கிறார்.
குட்கா கடத்திய இருவர் கைது
வடமதுரை : வடமதுரையில் காரில் கடத்தி சென்ற 70 கிலோ குட்கா பொருட்களை வேடசந்துார் டி.எஸ்.பி., இலக்கியா தலைமையில் தனிப்படை போலீசார் மடக்கினர். காரில் வந்த வடமதுரை செங்குளத்துபட்டி முத்துவேல் 28, மொட்டணம்பட்டி பாலமுருகன் 29 ,ஆகியோரை கைது செய்தனர். குட்கா, கார் பறிமுதல் செய்யப்பட்டது.
கார் மோதி தொழிலாளி பலி
கள்ளிமந்தையம்: கள்ளிமந்தையம் எல்லைப்பாளையத்தை சேர்ந்தவர் கூலி தொழிலாளி வேலுச்சாமி 50. டூவீலரில் கள்ளிமந்தையம் -தாராபுரம் ரோட்டை எல்லைப்பாளையம் பிரிவு அருகே கடக்க முயன்ற போது கார் மோதி இறந்தார். கள்ளிமந்தையம் போலீசார் விசாரிக்கின்றனர்.

