sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

போலீஸ் செய்திகள்.....

/

போலீஸ் செய்திகள்.....

போலீஸ் செய்திகள்.....

போலீஸ் செய்திகள்.....


ADDED : அக் 21, 2024 05:25 AM

Google News

ADDED : அக் 21, 2024 05:25 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குட்கா விற்ற இருவர் கைது

வத்தலக்குண்டு: ஜி.தும்மலபட்டியைச் சேர்ந்தவர் முருகேசன். இவரது மனைவி ராஜலட்சுமி.

மளிகை கடை வைத்துள்ளார். இவரது கடையில் சட்ட விரோதமாக குட்கா விற்பனை செய்வதாக வத்தலக்குண்டு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. ராஜலட்சுமியின் கடையில் போலீசார் சோதனை நடத்தி அவரையும்,மொத்த விற்பனையில் ஈடுபட்ட சுலைமானையும் கைது செய்தனர்.

நகை திருட்டு

நிலக்கோட்டை: குண்டலபட்டி மேற்கு தெருவை சேர்ந்தவர் பாப்பு 55. இவரது கணவரும் 3 மகன்களும் வெளியூரில் நகை தொழிலில் ஈடுபட்டுள்ளனர். பாப்புவின் மூத்த மருமகள் ஹேமலதா, அருகிலேயே புதிதாக கட்டப்பட்ட வீட்டின் முதல் மாடியில் கணவர் குமாருடன் வசிக்கிறார். கணவர் வெளியூர் சென்றதால் தன் மாமியார் வீட்டில் இரவு துாங்கினார். அக்.18ல் இரவு ஹேமலதா,வீட்டின் பின்பக்க கதவை உடைத்து பீரோவிலிருந்த 5 பவுன் நகையை மர்ம நபர்கள் திருடினர். நிலக்கோட்டை போலீசார் விசாரிக்கின்றனர்.

ரயில் மோதி பலி

திண்டுக்கல்: திண்டுக்கல் ரயில்வே ஸ்டேஷன் அம்பாத்துறை இடையில் அக்.19ல் அடையாளம் தெரியாத 60 வயது ஆண் ஒருவர் ரயில் மோதி இறந்து கிடந்தார். தகவலறிந்த திண்டுக்கல் ரயில்வே போலீசார் அவரது உடலை மீட்டு விசாரிக்கின்றனர். விசாரணையில் சிவப்பு,வெள்ளை கலந்த ரவுண்ட் கழுத்து டி.சார்ட்,புளு,கருப்பு கலர் கட்டம் போட்ட கைலி,இடது கையில் ஜெயா, வலது கையில் இரட்டை இலை சின்னம் பச்சை குத்தியுள்ளார்.

திருடமுயற்சி: வட மாநில இளைஞர் கைது

கோபால்பட்டி: -சாணார்பட்டி கோபால்பட்டி ஏழுமலையான் நகரை சேர்ந்த தனியார் வங்கி ஊழியர் செல்வகுமார் 35. இவர் தனது வீட்டை பூட்டி வேலைக்கு சென்றார். நேற்று வடமாநில வாலிபர் ஒருவர் வீட்டுக்குள் புகுந்தார். அக்கம்பக்கத்தினர் அவரை மடக்கி பிடித்தனர். சாணார்பட்டி போலீசார் அந்த வடமாநில வாலிபரை போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்து வந்து விசாரிக்கின்றனர்.

போதை காளான்: ஒருவர் கைது

கொடைக்கானல்:- கொடைக்கானல் மன்னவனுாரை சேர்ந்தவர் கோபிராஜா 31. போதை காளான் விற்பனையில் ஈடுபடுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இவரிடமிருந்து 5 கிராம் போதை காளானை போலீசார் பறிமுதல் செய்து அவரை கைது செய்தனர்.

இருவர் கைது

நெய்க்காரப்பட்டி:பழநி நெய்க்காரப்பட்டி அருகே மதுரை மாவட்டம் சோழவந்தான் பகுதியைச் சேர்ந்தவர்கள் அன்புராஜ்20. சரத்குமார் 22. இவர்கள் பாப்பம்பட்டி கல்லாபுரம் பகுதியில் பணிபுரிகின்றனர். இருவரும் பாப்பம்பட்டி அருகே டூவீலரில் வந்தபோது போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். பழநி தாலுகா போலீசார் இருவரையும் கைது செய்து 150 கிராம் கஞ்சா,டூவீலர் பறிமுதல் செய்யப்பட்டது.






      Dinamalar
      Follow us