மது விற்றவர்கள் கைது
திண்டுக்கல்:திண்டுக்கல் மதுவிலக்கு டி.எஸ்.பி முருகன் மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் வசந்தகுமார் தலைமையில் எஸ்.ஐ.,ஜெய்கணேஷ் உள்ளிட்ட போலீசார் திண்டுக்கல்,நத்தம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். பாலகிருஷ்ணாபுரம் ஓடைப்பட்டி பிரிவில் மது விற்ற விஜய்40,நத்தம் அரவக்குறிச்சியில் மது விற்ற சேத்துாரை சேர்ந்த முத்துக்குமார்47,ஆகியோரை கைது செய்து 52 மது பாட்டில்கள் பறிமுதல் செய்தனர்.
விபத்தில் மேலும் ஒருவர் பலி
திண்டுக்கல்: சிறுமலை பழையூரை சேர்ந்தவர் சுப்பிரமணி28,மனைவி சத்யா,2வயது மகன் சதீஷ்குமார் ஆகியோருடன் செப்.30ல் டூவீலரில் சிறுமலைக்கு சென்றார். செக்போஸ்ட் அருகே சென்றபோது எதிரே சிறுமலையை சேர்ந்த ராமர்22, ஓட்டிவந்த டூவீலர் மோதியது. இதில் ராமர் இறந்தார். சதீஷ்குமார் அரசு மருத்துவமனை செல்லும் வழியில் இறந்தார். சுப்பிரமணி,சத்யா இருவரும் திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். சுப்பிரமணி மேல் சிகிச்சைக்காக மதுரைக்கு மாற்றப்பட்டநிலையில் நேற்று அவரும் இறந்தார். போலீசார் விசாரிக்கின்றனர்.
மிரட்டியவர் கைது
திண்டுக்கல்: செல்லாண்டியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் இப்ராகிம்ஷா24. இவர் நேற்று திண்டுக்கல் ஏ.எம்.சி.,ரோடு பகுதியில் கத்தியை காட்டி அவ்வழியில் சென்றவர்களை மிரட்டினார். வடக்கு போலீசார்இப்ராகிம்ஷாவை, கைது செய்து விசாரிக்கின்றனர்.டூவீலர் எரிப்பு
திண்டுக்கல்: கிழக்கு மரியநாதபுரத்தை சேர்ந்தவர் ஜோதிபிரியா26. நேற்று முன்தினம் இவரது தந்தை ஜேம்சின்,டூவீலர் வீட்டிற்கு வெளியே நின்றது. அதை மர்ம நபர்கள் யாரோ தீ வைத்து எரித்ததாக ஜோதிபிரியா,நேற்று வடக்கு போலீசில் புகாரளித்தார். போலீசார் விசாரிக்கின்றனர்.