ADDED : நவ 22, 2024 04:58 AM
தவறி விழுந்து பலி
நத்தம்: சேத்துாரை சேர்ந்த டீக்கடை உரிமையாளர் கணேசமூர்த்தி 58. நவ.17ல் இவர் இரவு டீ கடையை அடைத்து விட்டு தனது டூவீலரில் சின்ன அரவங்குறிச்சியை சேர்ந்த அழகு என்பவருடன் ஊருக்கு சென்றார். டூவீலரை கணேசமூர்த்தி ஓட்டினார். நத்தம்- துவரங்குறிச்சி தேசிய நெடுஞ்சாலை புதுார் பகுதியில் வந்தபோது நாய் குறுக்கே வந்தது. இதில் இருவரும் தடுமாறி கீழே விழுந்தனர். சிகிச்சை பலனில்லாமல் கணேசமூர்த்தி, நேற்று இறந்தார். இன்ஸ்பெக்டர் தங்க முனியசாமி வழக்கு பதிந்து விசாரிக்கிறார்.
வாலிபர் காயம்
நிலக்கோட்டை: நிலக்கோட்டை அக்ரஹாரப்பட்டியை சேர்ந்த கூலித்தொழிலாளி ராஜ்குமார் 25. இவர் நேற்று அணைப்பட்டி ரோட்டில் நிலக்கோட்டை நோக்கி டூவீலரில் வந்தார். அப்போது பழைய யூனியன் ஆபீஸ் அருகே வந்தபோது எதிரே வந்த டிப்பர் லாரி மோதி தலையில் காயம் ஏற்பட்டது. நிலக்கோட்டை டிப்பர் லாரி டிரைவர் பாப்பிநாயக்கன்பட்டியை சேர்ந்த சுகுமாறன் 43, மீது வழக்கு பதிவு செய்தனர்.