டூவீலர் மோதி விபத்து
நத்தம்: -மதுரை சேக்கிபட்டி அருக்கம்பட்டியை சேர்ந்தவர் செல்வம் 60. இவர் நத்தம் ஆவிச்சிபட்டியில் தனியார் கல்குவாரியில் காவலாளியாக வேலை பார்த்தார். நேற்று காலை வேலை முடிந்து தனது டூவீலரில் ஊருக்கு சென்றார்.
காரைக்குடி ரோட்டில் உள்ள சம்பபட்டி பிரிவு பகுதியில் சென்றபோது பின்னால் வந்த திருவாடானையை சேர்ந்த ரஞ்சித் 26,என்பவர் ஓட்டி வந்த டூவீலர் அவர் மீது மோதியது. இதில் செல்வத்திற்கு கால் முறிவு ஏற்பட்டது. எஸ்.ஐ., தர்மர் வழக்கு பதிவு செய்து விசாரிக்கிறார்.
புகையிலை விற்றவர்கள் கைது
வடமதுரை: எஸ்.ஐ.,க்கள் பாண்டியன், சித்திக் காணப்பாடி, செங்குறிச்சி பகுதியில் ரோந்து சென்ற போது புகையிலை பாக்கெட்டுகளை மறைத்து விற்ற புதுப்பாளையம் காளிமுத்து 45, எஸ்.குரும்பபட்டி அருண்பாண்டி 25 ஆகியோரை கைது செய்தனர். 58 புகையிலை பாக்கெட்டுகள், பணம் ரூ.2, 500 பறிமுதல் செய்யப்பட்டது.
தடை புகையிலை: ஒருவர் கைது
வேடசந்துார்: தலைமை காவலர் காமராஜ், முதல் நிலை காவலர் விஜயகண்ணன் ஆகியோர் காக்காத்தோப்பூர் பிரிவு அருகே ரோந்து சென்றனர். வேடசந்துார் சீனிவாசன் 53, என்பவர் புகையிலைப் பொருட்களை விற்பனை செய்தது தெரிந்தது. போலீசார் அவரை கைது செய்தனர். வேடசந்துார் எஸ்.ஐ., ஜெயலட்சுமி வழக்குப்பதிந்து விசாரிக்கிறார்.
லாட்டரி விற்றவர் கைது
சாணார்பட்டி: -நத்தம் இன்ஸ்பெக்டர் தங்க முனியசாமி, எஸ்.ஐ., பொன் குணசேகர் ஆகியோர் தலைமையிலான தனிப்படை போலீசார் கோபால்பட்டி பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அங்கு சந்தேக படும் படி நின்றவரை பிடித்து விசாரித்தனர். வேம்பார்பட்டி காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்த பாண்டி 34,என்பதும் லாட்டரி சீட்டுகள் வைத்திருந்ததும் தெரிந்தது. போலீசார் அவரை கைது செய்து அவரிடமிருந்து ரூ.1250 பணம்,லாட்டரி சீட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது.
திண்டுக்கல்: மேட்டுப்பட்டியை சேர்ந்தவர் லுார்துசாமி. மேட்டுப்பட்டி பகுதியில் அலைபேசி மூலம் ஆன்லைன் லாட்டரி டிக்கெட்டுகளை விற்றார். தகவலறிந்த தெற்கு போலீசார் லுார்துசாமியை கைது செய்து ரூ.15 ஆயிரத்தை பறிமுதல் செய்தனர்.
பெண்ணிடம் நகை பறிப்பு
நிலக்கோட்டை: மேட்டுப்பட்டி எம்.ஜி.ஆர்., நகரை சேர்ந்த தனியார் ஊழியர் பிலோமீனா 30.
இவர் நவ.23 மாலை தனது கணவர் தேவசகாயம்,2 குழந்தைகளுடன் திண்டுக்கல்லிலிருந்து காமலாபுரம், ஜங்கால்பட்டி வழியாக நிலக்கோட்டை ரோட்டில் துள்ளுப்பட்டி பிரிவு அருகே டூவீலரில் சென்றார்.
அப்போது பின்னால் டூவீலரில் ஹெல்மெட் அணிந்து வந்த அடையாளம் தெரியாத இருவர், பிலோமீனா கழுத்தில் அணிந்திருந்த 3 பவுன் செயினை பறித்து தப்பினர். நிலக்கோட்டை போலீசார் விசாரிக்கின்றனர்.