பாட்டி,பேரனுக்கு கத்தி குத்து
வடமதுரை : கம்பிளியம்பட்டி சங்கிலிதேவனுாரை சேர்ந்த மில் தொழிலாளி சிவபாலாஜி 21. இவரது பாட்டி சின்னத்தாய் 80. இருவரும் காளியம்மன் கோயில் அருகே நின்ற போது, உறவினரான விக்னேஷ் 35 ,முன்விரோத பிரச்னையில் இருவரையும் கத்தியால் குத்தி விட்டு தப்பினார். படுகாயமடைந்த இவர்கள் திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். வடமதுரை எஸ்.ஐ., வேலுமணி விசாரிக்கின்றனர்.
புகையிலை விற்றவர் கைது
வடமதுரை : புத்தூர் கரிவாடன்செட்டிபட்டி பகுதியில் வடமதுரை எஸ்.ஐ., வேலுமணி , போலீசார் ரோந்து சென்றனர். அங்குள்ள கடையில் புகையிலை பாக்கெட்களை மறைத்து விற்பனை செய்த கருவண்டராயரை38, கைது செய்தனர்.
சூதாடிய 4 பேர் கைது
நத்தம்:நத்தம் சுற்றுப்பகுதிகளில் எஸ்.ஐ., கிருஷ்ணகுமார் தலைமையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்ட போது திண்டுக்கல் சாலை வேலாயுதம்பட்டி பகுதி நாடக மேடையில் கும்பல் ஒன்று பணம் வைத்து சூதாடினர். அதன்படி வேலாயுதம்பட்டியை சேர்ந்த கரண் 31, முருகன் 50, வீராசாமி 31,பூமி 29 , ஆகியோரை கைது செய்தனர்.