புத்தாண்டு கொண்டாட்டத்தில் கத்திக்குத்து
வடமதுரை: ஏழுமலையான் கோயில் தெருவில் புத்தாண்டு கொண்டாட்டத்திற்காக வீதியில் நின்றதால் ராமதிலகம் 54, செந்தில்குமார் 50 என இரு குடும்பத்தினர் இடையே தகராறு ஏற்பட்டது. இரு தரப்பினரும் மோதலில் ஈடுபட்டதால் வீடுகளில் இருந்த ஜன்னல், இதர பொருட்கள் சேதமானது. ராமதிலகத்தின் மகன் குமரகுரு 28, கத்தியால் குத்தப்பட்டார். வடமதுரை போலீசார் ஹரிசை கைது செய்தனர்.
விபத்தில் மூதாட்டி பலி
வத்தலக்குண்டு: குளத்துப்பட்டியை சேர்ந்தவர் செவத்தக்கா 69. நிலக்கோட்டை ரோட்டில் நடந்து சென்ற போது நிலக்கோட்டையை சேர்ந்த ஆனந்த் ஓட்டிசென்ற டூவீலர் மோதியதில் இறந்தார். வத்தலக்குண்டு போலீசார் விசாரிக்கின்றனர்.
சலுான் தொழிலாளிக்கு வெட்டு
திண்டுக்கல்: திண்டுக்கல் சாணார்பட்டி ஆவிளிபட்டியை சேர்ந்தவர் ரமேஷ்35. நத்தம் ரோட்டில் சலுான் கடை வைத்துள்ளார். நேற்று இரவு கடையில் வேலை பார்த்துக் கொண்டிருந்த போது அங்கு வந்த மர்ம நபர்கள் சிலர் அரிவாளால் ரமேஷை , தலை,கை,கால் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வெட்டினர். காயமடைந்த ரமேசை, அக்கம் பக்கத்தினர் திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். வடக்கு இன்ஸ்பெக்டர் வெங்கடாஜலபதி தலைமையிலான போலீசார் விசாரித்தனர்.

