விபத்தில் பலி
நத்தம்:சேர்வீடு கிராமத்தை சேர்ந்த கூலித் தொழிலாளி சூரி 58. இவர் நேற்று மதுரை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள வீமாஸ்நகர் பகுதியில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்று விட்டு ரோடை கடக்க முயன்றார். அப்போது சென்னை தங்கமணி, என்பவர் ஓட்டி வந்த கார் இவர் மீது மோதி இறந்தார். நத்தம் போலீசார் விசாரிக்கின்றனர்.
திருடியவர் கைது
திண்டுக்கல்: திண்டுக்கல் ஆர்.எம்.காலனியை சேர்ந்த மின் வாரிய ஊழியர் ஹரிபிரசாத்31. இவரது வீட்டில் சில நாட்களுக்கு முன் துாத்துக்குடியை சேர்ந்த பிரபாகரன்48,என்பவர் புகுந்து அங்கிருந்த ரூ.1லட்சத்தை திருடினார். நேற்று மேற்கு போலீசார் பிரபாகரனை,கைது செய்து விசாரிக்கின்றனர்.
அலைபேசி,லேப்டாப் ஒப்படைப்பு
திண்டுக்கல்: நெல்லை நாங்குநேரியை சேர்ந்தவர் சுரேஷ்28. இவர் நேற்று முன்தினம் இரவு தாம்பரத்திலிருந்து அந்தியோதயா எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணித்தார். நேற்று காலை ரயில் திண்டுக்கல் வந்தது. அப்போது சுரேஷ்,தன் அலைபேசியை தவறவிட்டார். திண்டுக்கல் ரயில்வே போலீசார் அதை மீட்டு சுரேஷிடம் ஒப்படைத்தனர். இதேபோல் சிவகங்கை நாட்டரசன் கோட்டையை சேர்ந்த கண்ணப்பன்,வந்தே பாரத் ரயிலில் தன் மடிக்கணினியை,தவறவிட்டார். ரயில்வே போலீசார் அதை மீட்டு கண்ணப்பனிடம் ஒப்படைத்தனர்.
பாம்பு மீட்பு
வேடசந்துார் : வேடசந்துார் வசந்த நகரை சேர்ந்தவர் கவிதா 39. மகளிர் அழகு நிலையம் நடத்துகிறார். இவரது வீட்டின் காம்பவுண்ட் சுவருக்குள், நாகபாம்பு ஒன்று இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். வேடசந்துார் தீயணைப்புத்துறையினர் உயிருடன் பிடித்து மலைப்பகுதியில் விடுவதாக கொண்டு சென்றனர்.