தந்தையை கத்தியால்
குத்திய மகன் கைது
வேடசந்துார்: வேடசந்துார் அருகே தந்தையை கத்தியால் குத்திய மகனை போலீசார் கைது செய்தனர்.மாரம்பாடி பெரியகுளத்துபட்டியை சேர்ந்தவர் விவசாயி செபஸ்தியார் 55.
இவரது மகன் புரோட்டா மாஸ்டர் அருண்குமார் 35. பூத்தாம்பட்டி டாஸ்மார்க் கடை அருகே, செபஸ்தியார் நின்ற போது அங்கு வந்த அருண்குமார் தந்தை செபஸ்தியாரை திட்டி வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
அப்போது கத்தியால் கை ,கால்களில் குத்தினார். வேடசந்துார் எஸ்.ஐ., ஜெயலட்சுமி அருண்குமாரை கைது செய்தார்.
கஞ்சா செடி;கைது
கொடைக்கானல்: கொடைக்கானல் செல்லபுரத்தை சேர்ந்தவர் டேனியல் 19. கஞ்சா செடிகளை டூவீலரில் கொண்டு வந்தபோது பாம்பார்புரத்தை சேர்ந்த சிலர் இவரை பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். கொடைக்கானல் போலீசார் டேனியலை கைது செய்து கஞ்சா செடிகளை பறிமுதல் செய்தனர்.
பள்ளி வேன் மீதுமோதிய கார்
குஜிலியம்பாறை : திருப்பூர் மாவட்டம் மேட்டாகாட்டுவலசையை சேர்ந்தவர் கிருஷ்ணன் 49. உறவினர் சுரேஷ் உடன் கரூரிலிருந்து குஜிலியம்பாறை அருகே உள்ள புளியம்பட்டி நோக்கி காரில் வந்தார்.
அதே ஊரை சேர்ந்த சஞ்சீவி 26, காரை ஓட்டி வந்தார். குஜிலியம்பாறை அரசு மருத்துவமனை அருகே வந்தபோது, எதிரே வந்த பள்ளி வேன் மோதியதில் கார் கவிழ்ந்தது. காரில் வந்த கிருஷ்ணன், சுரேஷ், சஞ்சீவி என மூன்று 3 பேர் காயமடைந்தனர். குஜிலியம்பாறை எஸ் ஐ., கலையரசன் விசாரிக்கிறார்.
தற்கொலை
நத்தம்: பண்ணுவார்பட்டியை சேர்ந்தவர் கூலித் தொழிலாளி குமார் 36. இவரது மனைவி முத்துலெட்சுமி. குடும்பத்தகராறில் துாக்கிட்டு தற்கொலை செய்தார். மன உளைச்சலிலிருந்த குமார் நேற்று துாக்கிட்டு தற்கொலை செய்தார். எஸ்.ஐ., தர்மர் விசாரிக்கிறார்.
விபத்தில் இருவர் காயம்
எரியோடு : நாகையகோட்டை கரையாம்பட்டியை சேர்ந்த செந்தில்குமார் 40, டூவீலரில் வேடசந்துார் சென்றார். அம்மாபட்டி புதுாரில் எதிரே தேவநாயக்கன்பட்டி கட்டட தொழிலாளி ராமர் 37 ஓட்டி வந்த டூவீலர் மோதியது. இருவரும் காயமடைந்தனர். எரியோடு போலீசார் விசாரிக்கின்றனர்.
சூது, மது: 4 பேர் கைது
வடமதுரை : சித்துவார்பட்டி நாடக மேடை அருகே பணம் வைத்து சூதாடிய கிழக்கு சித்துவார்பட்டி கோபால் 56, நாகன்களத்துார் டி.முருகேசன் 56, புது சித்துவார்பட்டி ஏ.முருகேசன் 52, வேல்வார்கோட்டை ஊராளிபட்டியில் வீட்டில் மதுபான பாட்டில்களை பதுக்கி வைத்து விற்ற முத்துவீரன் 41, ஆகியோரை வடமதுரை போலீசார் கைது செய்தனர்.

