/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
போலீஸ் செய்திகள் பணம் பறித்தவர் கைது
/
போலீஸ் செய்திகள் பணம் பறித்தவர் கைது
ADDED : நவ 06, 2025 06:48 AM
பணம் பறித்தவர் கைது
திண்டுக்கல்: அனுமந்த நகர் 3வது தெருவை சேர்ந்தவர் கூலி தொழிலாளி வேல்முருகன் 46. வத்தலகுண்டு சாலை கழுதை ரோடு பிரிவு அருகே சென்றபோது வழிமறித்த பொன்மாந்துறை புதுப்பட்டி காளியம்மன் கோயில் தெருவை சேர்ந்த திவாகர் 19 , பீர்பாட்டிலை வேல்முருகன் கழுத்தில் வைத்து மிரட்டி ரூ.1100ஐ பறித்து சென்றார். தாலுகா போலீசார் திவாகரை போலீசார் கைது செய்தனர்.
சிலை சேதம்; கைது
திண்டுக்கல்: கொட்டப்பட்டி ஜெயந்தி காலனி பகுதியை சேர்ந்த வினோத் 18, கல்லால் அங்குள்ள மதுரை வீரன் சுவாமி சிலையை சேதப்படுத்தினார். தட்டிக்கேட்ட பட்டாளம்மன், மதுரைவீரன் கோயில் நாட்டாமை தண்டபாணிக்கு கொலை மிரட்டல் விடுத்தார் தாலுகா போலீசார் கைது செய்தனர்.
காட்டு மாடு தாக்கி பெண் பலி
கன்னிவாடி: ஆடலுாரைச் சேர்ந்த கூலித்தொழிலாளி முத்துகிருஷ்ணன் மனைவி பாக்கியம் 60. நேற்று சத்தியமூர்த்தி தோட்டத்தில் காபி பழம் பறிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தார். தோட்டத்தில் புகுந்த காட்டுமாடு தாக்கியதில் இறந்தார். வனத்துறையினர், கன்னிவாடி போலீசார் விசாரிக்கின்றனர்.
முதியவர் பலி
நெய்க்காரப்பட்டி: பழநி கோவை சாலை சின்ன கலையம்புத்துார் வி.கே மில்ஸ் பகுதியைச் சேர்ந்தவர் நடராஜ் 70. டூவீலரில் ( ஹெல்மெட் அணியவில்லை) அதே பகுதியில் சென்றார். பின்னால் வந்த டூவீலர் மோதியதில் இறந்தார். பழநி தாலுகா போலீசார் விசாரிக்கின்றனர்.
ரோட்டில் கவிழ்ந்த லாரி
வேடசந்துார்: கர்நாடகா மாநிலம் கோலார் மாவட்டம் லிங்காபுரம் முள்பாதலை சேர்ந்தவர் மினி வேன் டிரைவர் கிருஷ்ணப்பா 40. வேனில் கர்நாடக மாநிலம் ஒண்டபள்ளியில் இருந்து மதுரைக்கு தக்காளி ஏற்றியப்படி கரூர் வழியாக வந்தார். வேடசந்துார் ரங்கநாதபுரம் அருகே சென்றபோது டயர் பஞ்ஜரானதால் டிவடைரில் மோதி கவிழந்தது. கூம்பூர் போலீசார் விசாரிக்கின்றனர்.
தொழிலாளி தற்கொலை
வேடசந்துார்: கோடாங்கிபட்டியை சேர்ந்தவர் கட்டட தொழிலாளி முருகன் 51. இவரது மனைவி இறந்த நிலையில் மகளுக்கு திருமணம் ஆகிவிட்டது. மகன் அடிக்கடி வெளியூர் சென்று விடுவார். வீட்டில் தனியாக சமைத்து சாப்பிட்டு வந்த இவர் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். வேடசந்துார் போலீசார் விசாரிக்கின்றனர்.
விபத்தில் மூதாட்டி பலி
ஒட்டன்சத்திரம்: குமாரபாளையத்தை சேர்ந்தவர் மூக்கம்மாள் 90. இங்குள்ள பஸ்ஸ்டாப் அருகே ரோட்டை கடக்க முயன்றார். செம்பட்டியில் இருந்து மூலச்சத்திரம் சென்ற கிரேன் மோதி பலியானார். ஒட்டன்சத்திரம் போலீசார் விசாரிக்கின்றனர்.

