/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
போலீஸ் செய்திகள்... ரயில் மோதி பலி
/
போலீஸ் செய்திகள்... ரயில் மோதி பலி
ADDED : மார் 19, 2025 05:37 AM
ரயில் மோதி பலி
திண்டுக்கல் : ராஜகாபட்டியை சேர்ந்தவர் திருமூர்த்தி57. பழநி அரசு போக்குவரத்து கழக பணிமனையில் டிரைவராக பணியாற்றினார். சில நாட்களாக உடல் நலம் சரியில்லாததால் விடுப்பில் வீட்டிலிருந்தார். நேற்று தாடிக்கொம்பு ரோடு எம்.வி.எம். கல்லுாரி அங்கு நகர் பகுதி ரயில்வே தண்டவாளம் அருகே வந்தார். அப்போது பழநியிலிருந்து திண்டுக்கல் வந்த சரக்கு ரயில் மோதி இறந்தார். ரயில்வே போலீசார் விசாரித்தனர்.
கஞ்சா கடத்திய இருவர் கைது
வேடசந்துார்: கூம்பூர் எஸ்.ஐ., விஜயபாண்டியன், தலைமை காவலர் கணேஷ் ராஜா, போலீஸ் சாமுவேல் ஆகியோர் கல்வார்பட்டி செக்போஸ்ட்டில் ஈரோடிலிருந்து - திருச்செந்துார் சென்ற அரசு பஸ்சை சோதனை செய்தனர். பஸ்சில் வந்த திண்டுக்கல் மேற்கு மரிய நாதபுரம் நியூ காட்சன் 27, செட்டிநாயக்கன்பட்டி ஜெகநாதன் 27, இருவரது பையை சோதனை செய்தபோது 3 கிலோ 700 கிராம் கஞ்சா இருந்தது தெரிந்தது. கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார் இருவரையும் கைது செய்தனர்.
வீட்டில் புகுந்து நகை திருட்டு
வடமதுரை : காணப்பாடி மாலப்பட்டியை சேர்ந்த மில் தொழிலாளி முருகராஜ் 32. இவரது மனைவியும் மில் தொழிலாளி. இருவரும் வேலைக்கு செல்வதால் பள்ளியில் படிக்கும் தங்களது குழந்தைகளுக்காக வீட்டை பூட்டி சாவியை மறைவிடத்தில் வைத்து செல்வது வழக்கம். இது தெரிந்த யாரோ வீட்டை திறந்து 7 பவுன் தங்க நகைகளை திருடி சென்றனர். வடமதுரை போலீசார் விசாரிக்கின்றனர்.
டூவீலர் திருடிய நால்வர் கைது
திண்டுக்கல் :திண்டுக்கலை சேர்ந்தவர்கள் ராஜாமலை37, கார்த்திக்25. இருவரும் தங்களது டூவீலர்களை மார்ச் 10ல் திண்டுக்கல் பஸ் ஸ்டாண்ட் பகுதியில் நிறுத்தியிருந்தனர். திரும்பி வந்து பார்த்த போது இருவரது டூவீலர்களும் திருடுபோனது. வடக்கு எஸ்.எஸ்.ஐ.,வீரபாண்டி தலைமையிலான போலீசார் விசாரணையில் மதுரை தீக்கதிர் அய்யனார் காலனி பிரகாஷ்36, மதுரை அய்யர் பங்களா விவேக்ராஜா27, திண்டுக்கல் மஞ்ச நாயக்கன்பட்டியை சேர்ந்த தாமரைக்கண்ணன்21, திண்டுக்கல் முருகபவனம் பாண்டியராஜன் 18, திருடிய நால்வரையும் கைது செய்தனர்.