ADDED : பிப் 23, 2024 05:55 AM
தற்கொலை
திண்டுக்கல்: கள்ளிப்பட்டியை சேர்ந்த கூலித்தொழிலாளி சேகர்40. குடும்ப பிரச்னையால் வீட்டில் துாக்கிட்டு தற்கொலை செய்தார். தாடிக்கொம்பு போலீசார் விசாரிக்கின்றனர்.
புகையிலை விற்றவர் கைது
திண்டுக்கல்: பாலமரத்துப்பட்டியை சேர்ந்தவர் சுரேஷ்பு . பெட்டிக்கடையில் புகையிலை பொருட்களை பதுக்கி விற்பனை செய்தார். தாலுகா போலீசார் கைது செய்தனர்.
கடைகளை உடைத்து கொள்ளை
வடமதுரை :வடமதுரை திண்டுக்கல் ரோட்டில் சந்தை எதிர்புறம் அடுத்தடுத்து 3 கடைகளை உடைத்து கொள்ளை நடந்துள்ளது. இப்பகுதியில் சசியின் இ சேவை மையத்தில் ரூ.5 ஆயிரம் பணம், பாலாஜியின் ஆட்டோமொபைல் உதிரி பாகங்கள் விற்பனை நிலையத்தில் பொருட்கள் ,மகேந்திரனில் டீக்கடையில் பணம் திருடு போயிருந்தன. கேமரா பதிவுபடி வட மாநில நபர் கொள்ளையில் ஈடுப்பட்டது தெரிந்தது. வடமதுரை போலீசார் விசாரிக்கின்றனர்.
மகளுடன் தாய் மாயம்
நத்தம்: பஞ்சயம்பட்டியை சேர்ந்தவர் நடராஜன் 32. இவரது மனைவி பஞ்சவர்ணம் 27. இவர்களுக்கு யாசினி என்ற மகள் உள்ளார். பிப்.16 காலை பஞ்சவர்ணம், மகளுடன் மாயமானார். நத்தம் -இன்ஸ்பெக்டர் தங்கமுனியசாமி விசாரிக்கிறார்.