வடமதுரையில் இருவர் பலி
வடமதுரை: கோப்பம்பட்டியை சேர்ந்த கட்டட தொழிலாளி ஜனகர் பாண்டி 26. நேற்று முன்தினம் மாலை நண்பர்களுடன் சேர்ந்து மது குடித்த நிலையில் உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டது. சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தார். வடமதுரை மேற்கு ரத வீதி பகுதியை சேர்ந்தவர் பார்த்தசாரதி 80. நேற்று காலை வடமதுரை பஸ் ஸ்டாப் பகுதியில் உடல் நலக்குறைவு காரணமாக இறந்து கிடந்தார். வடமதுரை போலீசார் விசாரிக்கின்றனர்.
ரோட்டோரம் கவிழ்ந்த லாரி
செம்பட்டி: நிலக்கோட்டையில் இருந்து கருங்கல் ஏற்றி செம்பட்டி நோக்கி வந்த லாரியை மதுரை மாவட்டம் திருமங்கலத்தை சேர்ந்த டிரைவர் செல்வம் 50, ஓட்டி வந்தார்.
காமுபிள்ளைசத்திரம் அருகே மதுரை ரோடு சந்திப்பில் வந்த லாரி கட்டுப்பாட்டை இழந்து ரோட்டோர புளிய மரத்தில் மோதி கவிழ்ந்தது. டிரைவர் லாரி முன்பகுதியில் சிக்கிக் கொண்டார். ஆத்துார் தீயணைப்பு துறை நிலைய அலுவலர் கணேசன் தலைமையில் ஒரு மணி நேரம் போராடி காயங்களுடன் மீட்டனர். செம்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.
மயங்கி விழுந்து இறந்த ஊழியர்
திண்டுக்கல்: திருச்சி லால்குடியை சேர்ந்தவர் நாகராஜ்54. திண்டுக்கல் நத்தம் ரோட்டில் உள்ள அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் உதவி பயிற்சி அலுவலராக பணியாற்றினார். இதற்காக அரசினர் தொழிற் பயிற்சி நிலையம் அருகே வாடகை வீட்டில் தங்கியிருந்தார். நேற்று வீட்டில் மயங்கி கிடந்தார். அக்கம் பக்கத்தினர் திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பரிசோதித்த டாக்டர்கள் இறந்ததாக தெரிவித்தனர். தாலுகா போலீசார் விசாரிக்கின்றனர்.
லாரி மோதி பெண் பலி
குஜிலியம்பாறை: சின்னத்தம்பிபட்டியை சேர்ந்த கூலித் தொழிலாளி சரவணன் மனைவி போதும் பொண்ணு 35. இரு குழந்தைகள் உள்ளனர்.நேற்று மாலை பாளையம் கடைவீதிக்கு வந்து திரும்பியபோது எதிரே வந்த கனரக லாரி மோதியதில் இறந்தார். குஜிலியம்பாறை போலீசார் விசாரிக்கின்றனர்.