ADDED : மார் 22, 2025 04:29 AM
மூவர் கைது
திண்டுக்கல்: வாழைக்காய்பட்டி தெற்கு தெருவை சேர்ந்தவர் சாந்த சதீஷ்வரன்35. திண்டுக்கல் சிறுமலை ரோடு பகுதியில் நடந்து சென்றார். நல்லாம்பட்டி பாலகிருஷ்ணன்31, பொன்மாந்துறை ஜெய கிருஷ்ண கண்ணன் 25, குள்ளனம்பட்டி முத்துகாமாட்சி24, மூவரும் சேர்ந்து சாந்த சதீஷ் வரனை வழிமறித்து பணம் பறித்தனர். தாலுகா போலீசார் மூவரையும் கைது செய்தனர்.
ஆயுதங்களுடன் சுற்றியவர்கள் கைது
திண்டுக்கல்: சிலுவத்துார் ரோடு குமரன் திருநகர் பகுதியில் கிழக்கு ஒய்.எம்.ஆர். பட்டி விக்னேஷ்வர்33, குமரன் திருநகரை சேர்ந்த தனசேகரன் 35, இருவரும் ஆயுதங்களுடன் சுற்றித்திரிந்தனர். வடக்கு போலீசார் இருவரையும் கைது செய்தனர். தெற்கு போலீஸ் ஸ்டேஷன், மேற்கு போலீஸ் ஸ்டேஷன் எல்லை பகுதிகளிலும் ஆயுதங்களுடன் சுற்றிய நால்வரை போலீசார் கைது செய்தனர்.
குட்கா விற்ற பெண் கைது
கீரனுார்: பழநி அத்தி வலசை சேர்ந்தவர் தாயம்மாள் 49. டீக்கடை வைத்துள்ளார். ரோந்து பணியில் ஈடுபட்ட கீரனுார் போலீசார் கடையில் ஆய்வு செய்ததில் 4.800 கிலோ தடை குட்கா புகையிலை பொருட்கள் கிடைத்தது. அவற்றை பறிமுதல் செய்த போலீசார் தாயம்மாளை கைது செய்தனர்.