இருவருக்கு கத்தி குத்து
வடமதுரை: முனியாண்டி கோயில் தெருவை சேர்ந்தவர் சவேரியம்மாள் 72. இவரது வீட்டை எழுதி தர கேட்டு மகன் ஜான்போஸ் 50, தகராறு செய்து வந்தார். நேற்றுமுன்தினம் தனது நண்பர் மணிமாறன் 35, சென்ற ஜான்போஸ் தகராறு செய்து சவேரியம்மாளையும், தடுக்க வந்த உறவினர் விஜய் ஆனந்தையும் 31 கத்தியால் குத்தினர். மணிமாறனை கைது செய்த வடமதுரை போலீசார், ஜான்போஸை தேடி வருகின்றனர்.
கிணற்றில் மிதந்த இளம்பெண் உடல்
வடமதுரை: சித்துவார்பட்டி மலைக்கோட்டையை சேர்ந்த ராமசாமி மகள் வினோதினி 20. இவரது தாய் விபத்தில் இறந்த நிலையில் தனது பெரியப்பா சின்னச்சாமி வீட்டில் வளர்ந்தார். நேற்றுமுன்தினம் மாயமான நிலையில் உறவினர்கள் தேடி வந்தனர். இந்நிலையில் நேற்று காலை கிராமம் அருகிலுள்ள ஒரு விவசாய தோட்டத்து கிணற்றில் வினோதினி உடல் மிதந்தது. இறப்பிற்கான காரணம் குறித்து வடமதுரை போலீசார் விசாரிக்கின்றனர்.
வழிப்பறி: மூவர் கைது
திண்டுக்கல் : திண்டுக்கல்லை சேர்ந்தவர் திருப்பதி, இவரின் நண்பர் மணிகண்டன். இருவரும் பெரியப்பள்ளப்பட்டி பிரிவு அருகே பேசிக் கொண்டிருந்தபோது, குடைபாறைப்பட்டி எம்.ஜி.ஆர்., நகர் ராஜா 38, தோட்டனுாத்து தங்கமணி 29, முத்துக்கருப்பையா 28 ஆகிய மூவரும் கத்தியை காட்டி மிரட்டியுள்ளனர். திருப்பதியிடமிருந்த ரூ.1,100 ஐ பறித்தனர். புகாரின் பேரில் திண்டுக்கல் தாலுகா போலீசார் மூவரையும் கைது செய்தனர்.
கஞ்சா விற்ற மூவர் கைது
பழநி : அடிவாரம் பகுதியில் பள்ளிகளுக்கு அருகே கஞ்சா விற்பனையில் ஈடுபட்டிருந்த குரும்பபட்டியைச் சேர்ந்த ஸ்ரீகுமார் 24, குறவன் பாறையைச் சேர்ந்த கார்த்திக் ராஜா 23, மணிகண்டன் 23 ஆகியோரை அடிவாரம் போலீசார் கைது செய்துள்ளனர்.
தொழிலாளி மாயம்
நத்தம்: செங்குளத்தை சேர்ந்தவர் வெள்ளைச்சாமி 52. தேங்காய் உரிக்கும் தொழிலாளியான இவர் நேற்று முன்தினம் வேலைக்கு சென்றவர் வீடு திரும்பவில்லை. இதுகுறித்து வெள்ளைச்சாமியின் மனைவி சுமித்ரா அளித்த புகாரின் பேரில் நத்தம் போலீசார் மாயமான தொழிலாளியை தேடி வருகின்றனர்.
விபத்தில் டிரைவர் பலி
திண்டுக்கல்: திண்டுக்கல் மேற்கு மரியநாதபுரத்தைச் சேர்ந்த டிரைவர் லில்லியம் பெர்க்மான் சேகர் 64,டூவீலரில் குள்ளனம்பட்டி நுகர்பொருள் வாணிப கிடங்கு அருகே சென்றபோது மற்றொரு டூவீலர் மோதியது. படுகாயமடைந்த லில்லியம் பெர்க்மான் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உயிரிழந்தார். திண்டுக்கல் வடக்கு போலீசார் விசாரிக்கின்றனர்.