விபத்துகளில் இருவர் பலி
ஒட்டன்சத்திரம்: திருச்சியை சேர்ந்தவர் முகமது ஹவுஸ் 80. ஒட்டன்சத்திரம் பைபாஸ் ரோடு கொல்லப்பட்டி பிரிவு அருகே ரோட்டை கடக்க முயன்ற போது லாரி மோதி பலியானார்.
* ரெட்டியார்சத்திரம் எஸ்.வாடிப்பட்டியை சேர்ந்த மணிகண்டன், வேடசந்துார் நல்லமநாயக்கன்பட்டியை சேர்ந்த மற்றொரு மணிகண்டனும் டூவீலரில் கொல்லப்பட்டி பைபாஸ் ரோடு அருகே சென்றபோது முன்னால் சென்ற லாரியில் மோதினர். டூவீலரை ஓட்டி சென்ற எஸ். வாடிப்பட்டியைச் சேர்ந்த மணிகண்டன் பலியானார். மற்றொரு மணிகண்டன் காயமடைந்தார். ஒட்டன்சத்திரம் போலீசார் விசாரிக்கின்றனர்.
பிளஸ் 2 மாணவி தற்கொலை
நத்தம்: விளாம்பட்டியை சேர்ந்த 17 வயது சிறுமி பிளஸ் 2 தேர்வில் 332 மதிப்பெண் பெற்றுள்ளார். மதிப்பெண் குறைவாக எடுத்ததால் மன உளைச்சலில் இருந்துள்ளார். இந்நிலையில் வீட்டின் அருகே தோட்டத்தில் பூச்சிக்கொல்லி மருந்து குடித்து தற்கொலைக்கு முயன்றார். மதுரை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர் இறந்தார். நத்தம் போலீசார் விசாரிக்கின்றனர்.
பள்ளிகளில் திருடியவர் கைது
வடமதுரை:அய்யலுார் களர்பட்டியை சேர்ந்தவர் செல்வம் 30. இவர் மலையடிப்பட்டி, இளங்காகுறிச்சி பள்ளி கதவை உடைத்து கம்ப்யூட்டர், உபகரணங்களை திருடினார். இவரை கைது செய்தவடமதுரை போலீசார் 4 கம்ப்யூட்டர், லேப் டாப்,் உபகரணங்களை பறிமுதல் செய்தனர்.
தொழிலாளி பலி
-வடமதுரை : பீகார் மாநிலம் மேற்கு சாம்ரான் பகுதியை சேர்ந்தவர் நந்துமாஜி 40. வடமதுரை மூணாண்டிப்பட்டி மில்லில் வேலை பார்த்து வந்தார். நேற்று முன்தினம் இரவு திண்டுக்கல் திருச்சி நான்கு வழிச்சாலையில் நடந்து சென்றபோது அடையாளம் தெரியாத வாகனம் மோத இறந்தார்.வடமதுரை போலீசார் விசாரிக்கின்றனர்.