கஞ்சா விற்ற இருவர் கைது
வேடசந்துார்: சேனன்கோட்டையை சேர்ந்தவர் செந்தில்குமார் 39. வீட்டில் கஞ்சா விற்பனை செய்தார். வேடசந்துார் போலீசார் கைது செய்த 120 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
பழநி: குரும்பபட்டியை சேர்ந்தவர் பிரதீப் 22. அப்பகுதி பூங்காவில் கஞ்சா விற்றார். அடிவாரம் போலீசார் 55 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்து அவரை கைது செய்தனர்.
விபத்தில் வாலிபர் பலி
வடமதுரை: எரியோடு அருகே வெல்லம்பட்டியை சேர்ந்தவர் நாகராஜ் 30. நேற்று காலை அய்யலுார் கொம்பேறிபட்டி இடையே செட்டிகளத்துார் பகுதியில் அடையாளம் தெரியாத வாகனம் மோதி இறந்தார். வடமதுரை போலீசார் விசாரிக்கின்றனர்.
புகையிலை பறிமுதல்
நத்தம்: செந்துறை பெட்டிக்கடையில் புகையிலை பொருட்கள் வைத்திருந்த கொண்டையம்பட்டியை சேர்ந்த ஆறுமுகம் 65,என்பவரை நத்தம் போலீசார் கைது செய்தனர். அவரிடமிருந்து 10 புகையிலை பாக்கெட்களை பறிமுதல் செய்தனர்.
9ஐ சீண்டய 65 கைது
ஒட்டன்சத்திரம்: கன்னிவாடி தெத்துப்பட்டியை சேர்ந்தவர் சந்திரன் 65. 9 வயது சிறுமியிடம் சில்மிஷம் செய்துள்ளார். ஒட்டன்சத்திரம் மகளிர் போலீசார் சந்திரனை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
விபத்தில் ஒருவர் பலி
ஆயக்குடி: கணக்கம்பட்டியைச் சேர்ந்தவர் சுந்தர்ராஜ் 45. இவருடன் ராஜபாளையத்தைச் சேர்ந்த திருப்பதி ஈஸ்வரன் 30, டூவீலரில் பொருளூரிலிருந்து கணக்கம்பட்டி நோக்கி வந்தனர். (ஹெல்மெட் அணியவில்லை) பின்னால் வந்த கார் மோதியதில் இருவரும் காயமடைந்தனர். சுந்தர்ராஜ் இறந்தார். திருப்பதிஈஸ்வரன் மதுரை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஆயக்குடி போலீசார் விசாரிக்கின்றனர்.