ADDED : ஜூன் 03, 2025 12:44 AM
நத்தம்: -நத்தம் அரவங்குறிச்சி பகுதி பெட்டி கடையில் தடை புகையிலை பொருட்களை விற்ற அதே பகுதியை சேர்ந்த கவிதாவை 47, நத்தம் போலீசார் கைது செய்தனர்.
...........
ஆடுகள் திருடிய 8 பேர் கைது
வடமதுரை :வடமதுரை, அய்யலுார், எரியோடு சுற்றுப்பகுதிகளில் கஞ்சா விற்பனையுடன் ஆடுகள் திருட்டுக்களிலும் ஈடுப்பட்ட வடுகப்பட்டி ரஞ்சித்குமார் 24, ஸ்ரீகாந்த் 24, வடமதுரை சரவணபிரபு, களர்பட்டி குருபிரசாந்த் 19, கிணத்துப்பட்டி சண்முகம் 20, தோப்புபட்டி சபரிகார்த்திக் 24, பெரியகுளம் பாலமுருகன் 35, ராஜக்காபட்டி சூர்யா 25, ஆகியோரை வடமதுரை போலீசார் கைது செய்தனர். இவர்களிடம் இருந்து 11 ஆடுகள், 1.25 கிலோ கஞ்சா, 2 டூவீலர் பறிமுதல் செய்யப்பட்டது.
...........
மறியல் செய்தவர்கள் மீது வழக்கு
வடமதுரை :செங்குறிச்சி ஆலம்பட்டியை சேர்ந்த விவசாயி பெருமாள் 60, மே 20 காலை அடையாளம் தெரியாத வாகனம் மோதி மே 30ல் இறந்தார். மோதிய வாகனத்தை கண்டறியாமல் பெருமாள் உடலை வாங்க மறுத்து வடமதுரையில் உறவினர்கள் ரோடு மறியல் செய்தனர். மறியல் செய்த சடையம்பட்டி பாண்டி 34, கருப்பன் 27, மணிகண்டன் 24, அகத்தியன் 38 ,உட்பட 13 பேர் மீது வடமதுரை போலீசார் வழக்கு பதிந்துள்ளனர்.