விழாவில் தகராறு
வேடசந்துார்: காக்காத்தோப்பூரை சேர்ந்தவர் ருத்ரேஸ்வரன் 33. ஊர் கோயில் விழாவில் மூன்றாவது நாள் அம்மன் கங்கை செல்லும் நிகழ்ச்சி நடந்த போது தப்பாட்டம் நடந்த நிலையில் அப்பகுதியை சேர்ந்த சிலர் ஆடிக்கொண்டு இருந்தனர். ருத்ரேஸ்வரன் சற்று ஓரமாக சென்று ஆடுங்கள் என கூறி உள்ளார். ஆத்திரமடைந்த காக்காத்தோப்பூர் ஜெகதீஸ்வரன் ருத்ரேஸ்வரனை தாக்கினார். வேடசந்துார் எஸ்.ஐ., பழனிச்சாமி விசாரிக்கிறார்.
புகையிலை விற்ற பெண் கைது
நத்தம்:குட்டுப்பட்டி பகுதி கடைகளில் நத்தம் எஸ்.ஐ., தர்மர் தலைமையிலான போலீசார் சோதனையில் ஈடுபட்டனர். குட்டுப்பட்டி-கன்னிமார்புரம் பகுதி பெட்டிக்கடையில் புகையிலைப் பொருட்கள் வைத்திருந்ததை கண்டனர். விற்ற மீனாட்சியை 36,கைது செய்தனர்.
கஞ்சா விற்றவர் கைது
சாணார்பட்டி: கொசவபட்டி கல்லறை மேடு பகுதியில் கொசவபட்டி மார்க்கெட் தெரு சதீஷ்குமார் 27, கஞ்சா விற்றார். அவரை சாணார்பட்டி போலீசார் கைது செய்தனர்.
வேன் மோதி இருவர் காயம்
வேடசந்துார்: உசிலம்பட்டி திருப்பதியும் 24 , இவரது அக்கா சகவுசல்யா என்பவரும் உசிலம்பட்டி நோக்கி டூ வீலரில் சென்றனர்.
திருப்பதி டூவீலரை ஓட்டினார். வெள்ளையகவுண்டனுார் அருகே சென்ற போது எதிரே அய்யலுார் குருந்தம்பட்டி கந்தப்பன் ஓட்டி வந்த வேன் மோதியது. டூவீலரில் சென்ற இருவரும் காயம் அடைந்தனர். வேடசந்துார் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். கூம்பூர் எஸ்.ஐ., சுரேஷ்பாபு விசாரிக்கிறார்.
7 கிலோ குட்கா பறிமுதல்
பழநி: பழநி அடிவாரம் பகுதியில் அதே பகுதியைச் சேர்ந்த விஜயகுமார் 46, 7 கிலோ தடை குட்கா, புகையிலைப் பொருட்களுடன் டூ வீலரில் வந்தார். எஸ்.ஐ., ராஜ்குமார் அவரை கைது செய்து வாகனத்துடன் குட்காவை பறிமுதல் செய்தார்.
கார் மோதி முதியவர் பலி
ஒட்டன்சத்திரம்: பொள்ளாச்சியை சேர்ந்தவர் நடராஜன் 80. உறவினர்களுடன் கார் ஒன்றில் வேடசந்துாரில் உள்ள குலதெய்வ கோயிலுக்கு சென்று விட்டு ஊருக்கு திரும்பினார்.
லெக்கையன்கோட்டை அரசப்பிள்ளைபட்டி பைபாஸ் ரோட்டை கடந்த போது கார் மோதி இறந்தார். ஒட்டன்சத்திரம் போலீசார் விசாரிக்கின்றனர்.
நடைபயிற்சி சென்றவர் காயம்
வேடசந்துார்: வாடகை கார் ஓட்டி வருபவர் ரகுமான் 38. இவரும் இவரது நண்பர் ரபிக் முகமது 35, வடமதுரை ரோட்டில் ஆர்.டி.ஓ., அலுவலகம் முன்பு நடை பயிற்சி சென்றனர். அந்த வழியாக வட மாநில தொழிலாளி விகாஸ் குமார் ஓட்டிச் சென்ற டூ வீலர் ரகுமான் மீது மோதியது. விகாஸ் குமார் ரகுமான் இருவரும் காயமடைந்தனர். வேடசந்துார் போலீசார் விசாரிக்கின்றனர்.
கஞ்சா விற்ற பெண்கள் கைது
நிலக்கோட்டை: சிலுக்குவார்பட்டி, கரியாம்பட்டி, பழைய சிலுக்குவார்பட்டி பகுதியில் பூக்கூடையில் கஞ்சாவை மறைத்து விற்பனை செய்த சிலுக்குவார்பட்டியை சேர்ந்த சுப்பிரமணி மனைவி பாண்டியம்மாள் 54, மதுரை மாவட்டம் வாடிப்பட்டி பொட்டியபட்டியை சேர்ந்த அய்யப்பன் மனைவி மல்லிகா 31, சிலுக்குவார்பட்டியை சேர்ந்த மாரிவேல் மனைவி பிரியா 25, என மூவரையும் நிலக்கோட்டை போலீசார் கைது செய்தனர்.