டூவீலர்கள் மோதலில் ஒருவர் பலி
வடமதுரை: காணப்பாடி புதுப்பட்டியை சேர்ந்தவர் மணி 50. இவரது உறவினர் சரவணன் 58. இருவரும் டூவீலரில் வேல்வார்கோட்டை பிரிவு அருகே வரும் போது போஜனம்பட்டி அருண் 21, ஓட்டி வந்த டூவீலர் மோதியது. சரவணன் இறந்தார். மணி, அருண் காயமடைந்தனர். வடமதுரை போலீசார் விசாரிக்கின்றனர்.
மின்சாரம் தாக்கி பலி
நத்தம்: - ஒத்தினிப்பட்டி- புதுாரை சேர்ந்தவர் மலைச்சாமி 61. நேற்று முன்தினம் மாலை அப்பகுதியில் உள்ள ஊராட்சி குளியல் தொட்டி மோட்டாரை இயக்க முயன்றார். அப்போது மின்சாரம் தாக்கி இறந்தார். நத்தம் போலீசார் விசாரிக்கின்றனர்.
மாற்றுத்திறனாளி பலி
வடமதுரை: செங்குறிச்சி மாமரத்துபட்டியை சேர்ந்த மாற்றுத்திறனாளி கண்ணன் 45. செப்.1ல் வல்லம்பட்டி பிரிவு பாலம் அருகில் டூவீலரில் வந்த போது ரோட்டோர பள்ளத்தில் தவறி விழுந்து இறந்தார். வடமதுரை போலீசார் விசாரிக்கின்றனர்.