லாட்டரி விற்றவர் கைது
செந்துறை: பஸ் ஸ்டாண்டில் வெளிமாநில லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்த சேர்வீடு பகுதியை சேர்ந்த பழனிச்சாமி 34 என்பவரை கைது செய்த நத்தம் போலீசார், ஆன்லைன் லாட்டரி சீட்டுகள், பணம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
டிரைவர் தற்கொலை
வடமதுரை: தென்னம்பட்டி கவுடர் தெருயை சேர்ந்தவர் சக்திவேல் 43. துாத்துக்குடியில் டிரைவராக பணிபுரிந்தார். கடந்த 3 நாட்களுக்கு முன்பு சொந்த ஊர் வந்திருந்த நிலையில் காணப்பாடி ரோட்டில் மதுவுடன் விஷம் குடித்து மயங்கி கிடந்தார். மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இறந்தார். வடமதுரை போலீசார் விசாரிக்கின்றனர்.
துாக்கிட்டு தற்கொலை
நத்தம்: சேர்வீடு கிராமத்தை சேர்ந்தவர் சின்னக்கண்ணு 60.இவர் கடந்த சில மாதங்களாக தீராத வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்துள்ளார். கடந்த சில நாட்களாக மன உளைச்சலில் இருந்த அவர் நேற்று முன்தினம் நத்தம் எம்.ஜி.ஆர்., நகர் பகுதியில் உள்ள புளியமரத்தில் கயிற்றால் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். நத்தம் போலீசார் விசாரிக்கின்றனர்.
கஞ்சா விற்றவர் கைது
வத்தலக்குண்டு: வத்தலக்குண்டு போலீசார் காந்தி நகர் மெயின் ரோட்டில் ரோந்து பணியில் ஈடுபட்ட போது சில்லறை விற்பனைக்காக கொண்டு செல்லப்பட்ட கஞ்சா பிடிபட்டது. அதே பகுதியைச் சேர்ந்த லட்சுமி நாராயணன் 45 என்பவரை கைது செய்த போலீசார் 4 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.