மிரட்டி பணம் பறித்தவர் கைது
திண்டுக்கல்: தண்டல்காரன்பட்டியை சேர்ந்தவர் தொழிலாளி ராமச்சந்திரன் 48. ஏ.வெள்ளோடு பகுதி கோயில் அருகே நண்பருடன் பேசிக்கொண்டிருந்தார்.
அங்குவந்த நல்லாம்பட்டியை சேர்ந்த சதீஸ்குமார் 20, பீர்பாட்டிலை ராமச்சந்திரன் கழுத்தில் வைத்து ரூ.800ஐ பறித்து சென்றார். தாலுகா போலீசார் சதீஸ்குமாரை கைது செய்தனர்.
முதியவரை தாக்கியவர் கைது
சாணார்பட்டி: சிலுவத்துார் அருகே பெத்தையகவுண்ட பட்டியை சேர்ந்தவர் அரசுபிள்ளை 76. அதே பகுதியில் பெட்டிக்கடை நடத்தி வருகிறார். அதே ஊரை சேர்ந்த முத்துப்பாண்டி 19, வாங்கிய பொருட்களுக்கு பணம் கேட்டபோது தாக்கினார். சாணார்பட்டி போலீசார் முத்துப்பாண்டியை கைது செய்தனர்.
தற்கொலை
ஆயக்குடி: மேலக்கோட்டை எவிசன் நகர் கரட்டுபிரிவை சேர்த்தவர் கூலித் தொழிலாளி பாண்டி 25. நேற்று குடிபோதையில் துாக்கிட்டு இறந்தார். ஆயக்குடி போலீசார் விசாரிக்கின்றனர்.
நத்தம்: அண்ணாநகரை சேர்ந்தவர் முருகேசன் 64. மதுப்பழக்கத்திற்கு அடிமையானதால் கணவன், மனைவி இடையே தகராறு இருந்து வந்தது. இதனால் மன உளைச்சலில் இருந்த முருகேசன் நேற்று பள்ளபட்டி பிரிவு தேங்காய் கோடவுனில் விஷம் குடித்து இறந்தார். நத்தம் போலீசார் விசாரிக்கின்றனர்.
வத்தலக்குண்டு: முனியாண்டி கோயில் தெருவை சேர்ந்தவர் பன்னீர்செல்வம் 40. எம். பில் பட்டதாரி ஆன இவர் ஆசிரியர் தகுதி தேர்வு ஏழுதினார். தேர்ச்சி பெறாததால் விரக்தியில் இருந்த இவர் நேற்று துாக்கிட்டு இறந்தார். வத்தலக்குண்டு போலீசார் விசாரிக்கின்றனர்.